For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான சருமம் மற்றும் கூந்தலைப் பெற சில பாட்டி வைத்திய ரகசியங்கள்!!

By Karthikeyan Manickam
|

பெண்களே... மறுநாள் ஒரு சூப்பரான மேக்கப்புடன் கல்லூரி அல்லது அலுவலகத்திற்குப் போகலாம் என்ற கனவுகளுடன் தூங்கச் செல்வீர்கள். ஆனால் காலையில் எழுந்து முகத்தைப் பார்த்தால் ஓரிரு பருக்கள் வெடித்திருக்கும் அல்லது உங்கள் தலைமுடி பொலிவிழந்து போயிருக்கும். சருமமோ நன்றாக உலர்ந்து போயிருக்கும்.

இதுப்போன்ற பல பிரச்சனைகளை நாம் நாள்தோறும் பார்த்திருக்கிறோம். இதைப் பார்த்தெல்லாம் நீங்கள் மிரண்டுபோக வேண்டிய அவசியமில்லை. கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை நாட வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் அருமையான பாட்டி வைத்தியம் தான் கை கொடுக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு அந்த வைத்தியங்களை மேற்கொண்டால் அழகு தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளை நீங்களாகவே தீர்த்து விடலாம். சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம் கூறும் அறிவுரைகளை இங்கே பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்களை நீக்க...

பருக்களை நீக்க...

மஞ்சள் பொடியுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் நீரை விட்டுக் கலக்கி, அந்தக் கலவையை முகத்தில் தோன்றியுள்ள பரு(க்கள்) மீது தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். அதேப்போல், பன்னீருடன் முல்தானி மெட்டியைக் கலந்து அதை முகம் முழுவதும் சீராகத் தடவி, அது உலர்ந்த பின்னர் முகத்தைக் கழுவினால், பருக்கள் மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெயும் நீங்கி விடும்.

சருமத்தை ஒளிரச் செய்ய...

சருமத்தை ஒளிரச் செய்ய...

கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் பால் க்ரீம் ஆகியவற்றைக் கலந்து ஒரு பேக் செய்து உங்கள் முகத்தில் தடவ, உங்கள் முகம் நன்றாக ஒளிரும். ஆரஞ்சுத் தோலுடன் மைசூர் பருப்பு பொடி, சிறிதளவு தேன் அல்லது பால் ஆகியவற்றைக் கலந்து தடவினாலும், உங்கள் சருமம் பளபளக்கும்.

பொடுகுத் தொல்லை தீர...

பொடுகுத் தொல்லை தீர...

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அதை பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பேஸ்ட்டை தலைமுடி வேரில் தடவி, சில மணிநேரம் கழித்து சீகைக்காய் அல்லது ஷாம்பு கொண்டு முடியைக் கழுவினால் பொடுகுத் தொல்லை குறையும். தயிருடன் வெள்ளை மிளகுப் பொடியைக் கலந்து முடி வேரில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். சருமப் பிரச்சனையையும் இது தீர்க்கும்.

மெல்லிய கூந்தலுக்கு...

மெல்லிய கூந்தலுக்கு...

தேனுடன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, அதை முடியில் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு முடியைக் கழுவ வேண்டும். முட்டைக் கருவுடன் தயிரைக் கலந்து, அக்கலவையை சிக்கலான முடியில் தடவலாம். முடியில் சிக்கு விழுந்தால், சீகக்காய் தடவினாலும் சிக்கல் விலகும்.

வளவளப்பான கை, கால்களுக்கு...

வளவளப்பான கை, கால்களுக்கு...

உங்கள் உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் சொரசொரப்பாக அல்லது வெடிப்புடன் உள்ளதா? தேன் மெழுகைத் தடவுவதன் மூலம் இதைச் சரிசெய்ய முடியும். உறங்கப் போகும் முன் பெட்ரோலியம் ஜெல்லியைக் கால்களில் தடவி, சாக்ஸுகளை அணிந்து கொள்ளவும். பின், காலையில் கால்களைக் கழுவ நல்ல ரிசல்ட் கிடைக்கும். சர்க்கரையுடன் தேனைக் கலந்து, முழங்கை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் தடவினாலும் பலன் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grandma’s Secrets For Beautiful Skin And Hair

A pimple pops overnight, hair not shiny enough, skin feels too dry! We all have faced these and many other similar hair and skin woes. Here are a few of them. Trust,these never make any sideffects for sure.
Desktop Bottom Promotion