For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரல் நுனிகளில் தோல் உரிவதைத் தடுக்க சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

விரல் நுனிகளில் தோல் உரியும் பிரச்சனையை நாம் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம். நகங்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையான பகுதியாகும். ஆகையால் அது மிகவும் உணர்ச்சிமிக்கதாய் உள்ளது. சிரங்கு, ஒவ்வாமை, வறண்ட சருமம், அடிக்கடி கழுவுதல், இரசாயனங்களை பயன்படுத்துதல் மற்றும் வைட்டமின் பி குறைபாடு ஆகிய கோளாறுகளால் தோல் உரிதல் ஏற்படுகின்றது. சில நேரங்களில் நாம் இதற்காக மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டியயிருக்கும்.

கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்!

இந்த வகையில் தோல் உரிவதற்கு பல்வேறு மருத்துவ காரணங்களும் இருக்கும். வெயில், உராய்வு, அதிக நீர் தன்மை ஆகிய இதர காரணங்களால் கூட தோல் உரியலாம். இந்த உரிதல் காரணத்தால் அந்த இடங்களில் செதில் போன்ற தோற்றமும் மற்றும் வீக்கமடைந்த பகுதிகளும் காணப்படும். இதற்கு சற்றே அதிகமாக அக்கறையும் சீரமைப்பும் தேவைப்படுகின்றது. இதற்கான முயற்சிகளை செய்ய நாம் சில குறிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அழகைக் கெடுக்குமாறு பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

சரியான பராமரிப்பு தராத போது தோல் உரிந்த இடத்தில் தொற்று வர வாய்ப்புகள் மற்றும் இதர பிரச்சனைகள் வர வாய்ப்புக்கள் அதிகம். அழகை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இப்படி தோல் உரிதல் பெரும் சங்கடத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். ஆனால் அதை குணப்படுத்துவது சுலபம். இதற்காக சிறிது நேரம் செலவு செய்தால் போதும் இது ஒரு தற்காலிக பிரச்சனையை போல சரி செய்து விடலாம். இதற்கான சில குறிப்புகள் இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூடான தண்ணீர்

சூடான தண்ணீர்

நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊற வைத்து, நன்கு துடைத்து, பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசர் தடவி இதமூட்டுவது சிறந்த யோசனையாகும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடுகின்றது. ஆகையால் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசர் தடவி இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபடுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இதை தடவிக் கொண்டு படுக்கலாம்.

மிருதுவாக துடைத்து விடுதல்

மிருதுவாக துடைத்து விடுதல்

கைகளை கழுவிய பின் வேகமாகவும் அழுத்தி துடைப்பதை தவிர்த்து விட்டு, மெதுவாகவும், விரல் தோல்களை உரிக்காத அளவிற்கும் துடைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் மெல்லிய துணியை பயன்படுத்த வேண்டும். சொரசொரப்பான துணிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது விரல் நுனிகள் சீக்கிரம் குணமடையும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

விரல் நுனிகளில் தோல் உரிவதை எளிய முறையில் குறைப்பதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படும். இது மிகச்சிறந்த ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்படுவதால் தோல் உரிவதை ஆற்றுப்படுத்தி, தோலை கெட்டிப்படுத்தும். இதை நாம் தினசரி பயன்படுத்தி வந்தால் தோல் உரிவதை தடுக்க முடியும்.

தண்ணீர்

தண்ணீர்

இத்தகைய எளிய முறைகளை பின்பற்றி தோல் நன்றாக வளரும் போது, உங்களை நீங்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக தண்ணீர் குடிப்பது அவசியம். ஆனால், நீங்கள் விரைவில் குணமடைய விரும்பினால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பால்

பால்

பால் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். பாலை விரல் நுனிகளில் பஞ்சு கொண்டு துடைப்பது மற்றும் பாலில் சிறிது நேரம் ஊற விடுதல் ஆகியவை தோல் உரிவதை தடுக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்னர் இவ்வாறு செய்து வந்தால் அது விரல்களுக்கு பலனுள்ளதாக இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இப்படி உரியும் தோலை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் வெள்ளரிக்காயை எடுத்து பாதிப்படைந்த இடத்தில் தேய்துத் வந்தால் குணம் கிடைக்கும். இல்லையென்றால் அரைத்த வெள்ளரியை சிறிது நேரம் பாதிப்படைந்த பகுதியில் போட்டால் அது குணமடையும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸை அரைத்து மித வெப்பமான தண்ணீரில் கலந்து இதில் விரல்களை 10 நிமிடம் ஊற வைத்து, மிருதுவாக துடைத்து பின்னர் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸ்ட்ரைசர் தடவி பாதுகாக்க வேண்டும். இது ஒரு சிறந்த வழியாகும்.

அதிகமான புரதச்சத்து

அதிகமான புரதச்சத்து

புரதச்சத்து தசைகளை உருவாக்குகின்றது. ஆகையால் இப்படி தோல் உரியும் போது அதில் விரைவாக புதிய தேலை வளரச் செய்கின்றது. ஆகையால் நல்ல புரதச்சத்து உள்ள உணவாக உட்கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Get Rid Of Peeling Fingertips: Top 9 Tips

Peeling fingertip is an annoying problem that you might have experienced at least once in your life. If you wonder how to take care of peeling fingers, here are some effective tips.
Desktop Bottom Promotion