For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக்கென்று தனியான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே, சிறு சிறு துகள்களாக அழுக்குகள் காதுகளுக்குள் சேர்ந்து விட வாய்ப்புகள் உள்ளன. மெழுகு போன்று அந்த அழுக்குகள் சேர்வதால் காது அடைத்துக் கொள்ளவும் கூடும். அழுக்குகளும், குப்பையும் காதை ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயமும் உண்டு.

அதிகபட்சமாக உள்ள மெழுகு மற்றும் அழுக்குகளிலிருந்து காதை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மெழுகு உருவாவதால் காதின் கேட்கும் திறன் பாதிக்கக் கூடும். சுத்தம் செய்யப்படாமல் தேங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் குப்பைகளால் பாக்டீரியா தொற்றுகள் அல்லது காது தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. காதை சுத்தம் செய்ய சில அடிப்படையான வழிமுறைகள் உள்ளன. அவ்வகையான வழிமுறைகளைப் பற்றி இங்கு காண்போம்.

Effective Tips To Clean Your Ear

மெழுகு கரைப்பான்கள்

காதில் அழுக்காக சேர்ந்துள்ள மெழுகை மென்மையாக்கவும் மற்றும் கரைக்கவும் கூடிய பல இயற்கையான மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய பொருட்கள் உள்ளன. வீட்டிலேயே செய்யக்கூடிய மெழுகு கரைப்பான்களில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, கிளிசரின் மற்றும் தாது எண்ணெய்கள் உள்ளன. இந்த பொருட்களை கலந்து செய்யப்படும் கலவைகள் மெழுகு கரைப்பான்களை உருவாக்குகின்றன. இந்த பொருட்களை 1-2 தேக்கரண்டிகள் கலந்து, காதில் 2-3 துளிகள் விடவும். இரவு முழுக்க இவ்வாறு வைத்திருந்து, பின் காலையில் காதை மென்மையான பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

சூடான எண்ணெய்

தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும். தேங்காய் எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்குமாறு காய்ச்சத் தொடங்கவும். வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயில் 3-4 துளிகளை காதில் விடவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெய் கரைப்பானாக செயல்பட்டு காதில் உள்ள மெழுகை கரைத்து, எளிதில் வெளியேறச் செய்யும். இவ்வாறு எண்ணெயை காதுக்குள் விடும் போது, தலையை எதிர்ப்புறமாக திருப்பி வைத்தால், எண்ணெய் காதுக்குள் ஆழமாக உள்ளே செல்லும். இரவு முழுவதும் எண்ணெயை காதுக்குள் வைத்திருக்கும் பொருட்டாக பஞ்சை கொண்டு காதை அடைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தண்ணீரை விட்டு காதை சுத்தம் செய்யுங்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் எண்ணெயையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

பட்ஸ்

மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் - மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான். காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான மற்றும் மென்மையான பட்ஸ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.

மருந்து தடவிய கரைப்பான்கள்

காதுகளை சுத்தம் செய்வதில் மருந்து தடவிய மெழுகு கரைப்பான்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றிற்கான கெமிக்கல் டோஸேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. பயனாளிகளுக்கான கையாளும் வழிமுறைகள் இந்த பாட்டில்களுடன் சேர்ந்து கிடைக்கின்றன. இவற்றை சொட்டு சொட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த கரைப்பான்களை வாரத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறையில் காதுகளை எளிதில் சுத்தம் செய்ய முடியும். எனினும், நிறைய வேதிப்பொருட்களை பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வதை தவிர்ப்பது நலம். ஏனெனில், உடலின் மிகவும் அழகிய, முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருப்பவை காதுகளாகும்.

மருத்துவ ஆலோசனை

இந்த வழிமுறைகளை எல்லாம் பயன்படுத்திய பின்னரும் உங்கள் காதுகளில் உள்ள அடைப்புகள் நீங்காவிடில், இது நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரமாகும். காது வலி மற்றும் மெழுகு உருவாகி கிடத்தல் ஆகியவை காது தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். காதுகளில் தொடர்ந்து மற்றும் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும். மேலும், மருத்துவர்கள் அவர்களிடமுள்ள கருவிகளைக் கொண்டு உங்கள் காதுகளை சுத்தம் செய்து விடுவார்கள். காதுகளில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அதற்கு தொடர்ந்த கவனிப்பும், பராமரிப்பும் அவசியம். உடலின் மற்ற பாகங்களைப் போலவே காதுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

English summary

Effective Tips To Clean Your Ear

Ears should be cleaned to remove the excess wax and dirt. The wax can block and impair hearing capabilities of the ear. Dirt and dust should also be removed as they may cause bacterial infections or diseases in the ears. There are some basic methods used to clean ears. Some of these are discussed below:
Story first published: Thursday, January 2, 2014, 18:46 [IST]
Desktop Bottom Promotion