For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக் காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க 5 பக்கா வழிகள்!!!

By Karthikeyan Manickam
|

மழைக் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் பயங்கர சந்தோஷம் தான். வெயிலில் காய்ந்து, வியர்வையில் அவதிப்பட்டு வரும் போது அட்டகாசமாக ஒரு சிறு தூறல் போட்டாலும் போதும். ஹாயாக அதில் நனைந்து மகிழ்வார்கள்.

அதே சமயம் அந்தத் தூறல் சிறிது சிறிதாக அதிகரித்து, பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தால், சிலருக்குத் திகில் வந்து ஒட்டிக் கொள்ளும். சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, அதில் நடக்கவும், வண்டி ஓட்டவும் மிகவும் பயமாகத் தான் இருக்கும்.

இன்னும் சிலருக்கு மழைக் காய்ச்சல், இருமல், சளி என்று தொடர் தொல்லைகள் வந்து ஆட்டிப் படைக்கும். மழை நீரில் நடப்பதால் சிலருக்குப் பாதங்களில் சேற்றுப் புண் வரவும் வாய்ப்புள்ளது. மழை நீரில் கண்டதும் கலந்து வருவதால், அதில் நடக்கும் போது அவை நம் பாதங்களைப் பதம் பார்க்கலாம். பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படலாம்.

இந்த மழைக் காலத்தில் நம் பாதங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தமாக வைத்திருங்கள்

சுத்தமாக வைத்திருங்கள்

பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும்.

கால் நகங்களை வெட்டுங்கள்

கால் நகங்களை வெட்டுங்கள்

கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். இதனால் அழுக்கு சேராது. நகம் இல்லாததால் கால்களைக் கழுவுவதும் எளிதாக இருக்கும்.

சரியான காலணிகளை அணியுங்கள்

சரியான காலணிகளை அணியுங்கள்

ஷூக்கள் போட்டு மழையில் நனையும் போதோ அல்லது மழை நீரில் நடக்கும் போதோ, ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போடுவதைத் தவிருங்கள். மேலும் எளிதில் காலில் நீர் புகாத காலணிகளைப் பயன்படுத்துவது நலம்!

காலணிகளை சுத்தம் செய்யுங்கள்

காலணிகளை சுத்தம் செய்யுங்கள்

கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் நன்றாக உலர வைக்கவும். அவை ஈரமாகவே இருந்தால் நோய்த் தொற்று ஏற்படும், ஜாக்கிரதை!

பெடிக்யூர் செய்யுங்கள்

பெடிக்யூர் செய்யுங்கள்

இந்தக் காலத்தில் அழகு நிலையத்துக்குச் சென்று பெடிக்யூர் செய்வது பெண்களின் வழக்கம். அதை இந்த மழைக் காலத்திலும் கட்டாயம் கடைப்பிடிக்கவும். மேலும் பெடிக்யூர் செய்யும் போது, சுத்தமான உபகரணங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Care For Your Feet This Rainy Season

The rains are finally here, and for most of us that means flooded roads. While it's inevitable to venture out, wading through waterlogged streets can wreck havoc on your feet and can also result in fungal infections. Here's how to care for them this season...
Desktop Bottom Promotion