For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

By Babu
|

அனைத்து சமையலிலும் சுவைக்காக சேர்க்கப்படும் தக்காளி உடலுக்கு பல்வேறு நன்மைகள் அள்ளிக் கொடுப்பதுடன், உடலின் அழகை பராமரிக்கவும் உதவியாக உள்ளது. மேலும் இது விலை குறைவாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாக இருப்பதால், கோடையில் சருமத்தின் அழகை பராமரிக்க தக்காளியைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில் தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதுடன், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் இது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும். மேலும் தக்காளியில் அசிடிக் ஆசிட் இருப்பதால், இது சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றிவிடும்.

ஆகவே கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தி, சருமத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் சருமத்தை பாதுகாப்புடன் பராமரிக்கலாம். அந்த வகையில் சருமத்தை பாதுகாப்புடன் பராமரிக்க தக்காளி மிகச்சிறந்த பொருள்.

இங்கு தக்காளியைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. இது வெளியில் இருந்து சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும். எனவே இதன் சாற்றினை சருமத்திற்கு தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் இது சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும்.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். இப்படி சரும செல்கள் பாதிப்படைந்தால் தான் முதுமை தோற்றமானது எளிதில் வரும். எனவே தினமும் தக்காளியின் சாற்றினைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இதனால் முதுமைத் தள்ளிப் போடலாம்.

சரும துளைகளை சுருக்கும்

சரும துளைகளை சுருக்கும்

தக்காளியைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்துளைகளானது சுருங்கும். அதற்கு தக்காளி சாற்றில், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்துளைகள் சுருங்கி, பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

பருக்கள் நீங்கும்

பருக்கள் நீங்கும்

சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க எத்தனையோ வழிகளை கடைப்பிடித்திருப்போம். ஆனால் தக்காளியைப் பயன்படுத்தினால், அதில் உள்ள வைட்டமின்கள் பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கிவிடும்.

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு...

எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு...

எண்ணெய் பசையுள்ள சருமத்தினருக்கு தான் பல சரும பிரச்சனைகள் வரும். அத்தகைய பிரச்சனைகளை போக்க பலர் பல கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் தினமும் தக்காளி சாற்றினை பயன்படுத்தினால், அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

சரும எரிச்சல்

சரும எரிச்சல்

கோடையில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதுடன், அரிப்புக்களும் ஏற்படும். அத்தகையவற்றை தடுக்க தினமும் தக்காளியைப் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

அனைத்து பெண்களுக்குமே நல்ல பொலிவான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் தக்காளி சாற்றினை தேனில் கலந்து, அதனைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்தால் நல்லது.

பொடுகைத் தடுக்கும்

பொடுகைத் தடுக்கும்

தக்காளி சாற்றனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து வர, பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஆரோக்கியமான கூந்தல்

ஆரோக்கியமான கூந்தல்

கூந்தல் பட்டுப்போன்று ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் தக்காளியை அதிகம் சாப்பிடுவதுடன், தக்காளி சாற்றினைக் கொண்டு கூந்தலைப் பராமரித்து வாருங்கள். இதனால் கூந்தலின் pH அளவு சீராக பராமரிக்கப்படுவதுடன், அதன் நிறமும் பாதுகாக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Care With Tomatoes

Using safe methods for beauty care is very important. Body care with tomatoes is one of the many natural alternatives available to us. Below we may discuss tomatoes beauty benefits. Try this and feel the difference.
Story first published: Tuesday, April 1, 2014, 11:09 [IST]
Desktop Bottom Promotion