For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்துப்போன்ற பற்களைப் பெற உதவும் சில இயற்கையான டூத் பேஸ்ட்டுகள்!!!

By Maha
|

தற்போது அனைவருக்கும் இயற்கையின் மகத்துவமானது புரிந்துவிட்டது. அதனால் பலர் எந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண இயற்கை வழியை நாடுகின்றனர். மேலும் அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களைப் பின்பற்றியதன் காரணமாகத் தான், அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிந்தது.

அதனை தற்போது தான் பலர் உணர்ந்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அறிந்து கொள்ளவும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அழகு என்று வரும் போது அதில் சிரிப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அப்படி சிரிக்கும் போது பற்கள் பளிச்சென்று இருந்தால் தான், அது உண்மையான அழகு.

எனவே அந்த முத்துப்போன்ற பற்களைப் பெற கடைகளில் பல கெமிக்கல் கலந்த டூத் பேஸ்ட்டுகள் விற்கப்பட்டாலும், உண்மையில் அந்த பொருட்கள் பற்களை வெண்மையாக்குவதில்லை. ஆகவே அப்படி பணம் செலவழித்து பற்களை வெண்மையாக்குவதற்கு, வீட்டிலேயே இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களை பராமரித்தால், பற்கள் பளிச்சென்று மின்னுவதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது பற்களை பளிச்சென்று மாற்றும் சில இயற்கையான டூத் பேஸ்ட்டுகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் உப்பு/கல் உப்பு

கடல் உப்பு/கல் உப்பு

கடைகளில் விற்கப்படும் டூத் பேஸ்ட்டிற்கு சிறந்த மாற்றாக உப்பு விளங்கும். இவை பற்களை வெண்மையாக பொலிவுறச் செய்வதுடன், பற்களை வலிமையாக்கும். மேலும் ஈறுகளில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளும். ஒருவேளை உங்களுக்கு உப்பு பயன்படுத்தி பற்களை துலக்க முடியாவிட்டால், பயன்படுத்தும் பேஸ்ட் உடன் சிறிது உப்பை தூவியோ அல்லது உப்பு நீரில் பிரஷ்ஷை நனைத்தோ பற்களை துலக்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால், அது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதிலும் இதனை பெப்பர்மிண்ட் எண்ணெயில் சேர்த்து பயன்படுத்தினால், பற்கள் வெள்ளையாவதுடன், வாய் துர்றாற்றம் இல்லாமலும் இருக்கும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

பளிச் பற்களுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடும் உதவிபுரியும். பெரும்பாலான மக்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த நீர்மத்தில் பிரஷ்ஷை நனைத்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாக இருக்கும். முடிந்தால், இந்த நீர்மத்துடன் பேக்கிங் சோடா அல்லது உப்பு சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். இதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீர்

தண்ணீரை விட மிகவும் சிறப்பான ஒன்றே வேறெதுவும் இல்லை என்று சொல்லலாம். அதிலும் சுத்தமான நீரில் பிரஷ்ஷை நனைத்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்களில் படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் வெளிவந்துவிடும். இருப்பினும், வெறும் தண்ணீரைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால், மனம் திருப்தியடையாது. எனவே இவற்றை செய்த பின் விருப்பான டூத் பேஸ்ட் பயன்படுத்தி வாயை நறுமணத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஆம், தேங்காய் எண்ணெய் கூட பற்களை வெண்மையாக்க உதவும். அதற்கு பிரஷ்ஷை தேங்காய் எண்ணெயில் நனைத்தோ அல்லது தேங்காய் எண்ணெயுடன் பேக்கிங் சோடா அல்லது உப்பு சேர்த்தோ பற்களை துலக்கலாம்.

வேப்பங்குச்சி

வேப்பங்குச்சி

என்ன தான் இருந்தாலும், வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால், அதனால் கிடைக்கும் நன்மைக்கு ஈடு இணை எதுவும் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Healthy Alternative For Toothpaste

Toothpaste is something that became commercialized when industrialization began. But what did our ancestors use to keep their teeth clean and breathe fresh? They used to indulge in natural products that were produced at that time. They were considered to be healthy alternatives for toothpaste. Here are some of the amazing alternatives to toothpaste.
Story first published: Saturday, May 10, 2014, 13:17 [IST]
Desktop Bottom Promotion