For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளிச்சென்ற முகம் வேண்டுமா? அப்ப தினமும் ஆவி புடிங்க....

By Maha
|

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், வீட்டில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இணை எதுவும் இருக்காது. ஏனென்றால் சருமத்தை அழகாக்க பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் அதிக அளவில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, அதிக அளவில் சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி வரும் போது, திடீரென்று அதன் உபயோகத்தை நிறுத்தினால், தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.

இதனால் சரும துளைகள் விரிவடைந்து, அதனுள் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

சுத்தமான சருமம்

சுத்தமான சருமம்

முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வெளிவந்து, சருமம் சுத்தமாக இருக்கும்.

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள்

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள்

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

பருக்கள் குறையும்

பருக்கள் குறையும்

ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்

முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்

மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

பிம்பிள்

பிம்பிள்

பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு கூட செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Face Steaming

Steaming was a very important part of the beauty regime of women of ancient Greece and Rome. Here are some benefits of steaming your face.
Story first published: Wednesday, September 24, 2014, 12:35 [IST]
Desktop Bottom Promotion