For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தினால் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

By Maha
|

அழகைப் பராமரிக்க எத்தனை அழகுப் பொருட்கள் கடைகளில் கிடைத்தாலும், இயற்கையான பொருட்களைக் கொண்டு பராமரிப்பதற்கு இணையாக எதுவும் வர முடியாது. அதிலும் கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், அவற்றால் சில சமயங்களில் பிரச்சனைகள் வருவதுடன், அவை தற்காலிக பலன்களைத் தான் கொடுக்கும். ஆனால் அதுவே இயற்கைப் பொருட்களைக் கொண்டு அழகைப் பராமரித்து வந்தால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதுடன், நிரந்தர பலனைப் பெறலாம்.

அதுவும் விலை மலிவில் கிடைக்கும் வாழைப்பழத்தில் உடலுக்கு வேண்டிய நன்மைகள் மட்டுமல்லாமல், அழகை அதிகரிக்கும் தன்மையும் அதிகம் உள்ளது. இங்கு வாழைப்பழத்தால் எப்படி சருமம் மற்றும் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன் படி வாழைப்பழத்தை பயன்படுத்தி வந்தால், நிச்சயம் நல்ல பலன்களைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான சருமத்தைப் பெற..

ஆரோக்கியமான சருமத்தைப் பெற..

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சருமமானது ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

பருக்களை போக்க...

பருக்களை போக்க...

நன்கு மசித்த வாழைப்பழத்தில், 1 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 சிட்டிகை பூந்திக்கொட்டை பொடி சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.

சரும சுருக்கங்கள் மறைய...

சரும சுருக்கங்கள் மறைய...

மசித்த வாழைப்பழத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சரும சுருக்கங்கள் மறையும்.

எண்ணெய் பசை சருமத்தை போக்க...

எண்ணெய் பசை சருமத்தை போக்க...

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்க வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் கொழுப்பு இல்லாத பால் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டு வாருங்கள்.

பொலிவான முகத்தைப் பெற...

பொலிவான முகத்தைப் பெற...

மசித்த வாழைப்பழத்துடன், 1/2 கப் ஓட்ஸ் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.

மென்மையான சருமத்தைப் பெற...

மென்மையான சருமத்தைப் பெற...

பாதி வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 அவகேடோவை மசித்து சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

சரும வறட்சியை போக்க...

சரும வறட்சியை போக்க...

மசித்த வாழைப்பழத்தை மட்டும் சருமத்தில்தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சரும வறட்சியானது நீங்கும்.

கூந்தல் உதிர்தலை தடுக்க...

கூந்தல் உதிர்தலை தடுக்க...

வாழைப்பழத்தை எடுத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1/2 கப் தயிர் ஊற்றி நன்கு அடித்து, பின் தலைக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

முடி வெடிப்பை சரிசெய்ய...

முடி வெடிப்பை சரிசெய்ய...

முடி வெடிப்பு ஏற்படாமல் இருக்க, வாரம் ஒருமுறை வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தேங்காய் பால் மற்றம் அவகேடோவை மசித்து சேர்த்து நன்கு கலந்து, தலை மற்றும் முடியில் நன்கு படும் படி தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Benefits Of Banana

Bananas are considered excellent for skin and hair. You can derive the various beauty benefits of banana by eating this fruit and applying on your skin to make your skin soft and healthy.
Story first published: Thursday, June 12, 2014, 15:58 [IST]
Desktop Bottom Promotion