For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆலிவ் எண்ணெயின் அற்புதமான அழகு நன்மைகள்!!!

By Boopathi Lakshmanan
|

இயற்கையாக கிடைக்கும் மதிப்பு மிக்க ஆலிவ் எண்ணெய் பல காலங்களகாவே பல்வேறு ஆரோக்கிய பலன்களை தன்னிடம் கொண்டுள்ளது. உயர்தரமான அழகு சாதனங்கள் மேற்கிலிருந்து உதயமானாலும், அதன் பலன்களும், அழகின் இரகசியங்களும் உலகெங்கிலும் பரவியுள்ளன. அமெரிக்க சந்தைகளில் முடி மற்றும் தோல் பராமரிப்பு சாதனங்கள் விணணையெட்டும் சந்தை மதிப்புகளைப் பெற்றுள்ளன.

மக்கள் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த நிவராணிகள் மற்றும் அழகு சாதன பொருட்களைப் பற்றி அதிகமாக விற்கும் அழகு சாதான நிறுவனங்கள் ஆய்வுகளும் செய்து வருகின்றன. வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட அழகு சாதனங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதே இந்த ஆய்வுகளின் முடிவுகளாக உள்ளன.

Amazing Beauty Benefits Of Olive Oil

மிகவும் பாதுகாப்பான இந்த வழிமுறைகள் உங்கள் அழகில் ஆச்சரியங்களை வரவழைக்கும் திறன் கொண்டவையாகும். இந்த அழகு சாதன பொருட்களில் ஆலிவ் எண்ணெய் முக்கியமான இடுபொருளாக உள்ளது என்பது தான் ஹைலைட். இயற்கையாக கிடைக்கும் இந்த ஆலிவ் எண்ணெய் தோலுக்கு மிகவும் ஏற்ற நிவாரணியாகும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் அழகிய மற்றும் சுத்தமான சருமம் கிடைக்கும். எனவே, ஆலிவ் எண்ணெய் வழங்கும் அழகு மற்றும் ஆரோக்கிய இரகசியங்களை இங்கே திறந்து பார்த்திடுவோமா?

மாய்ஸ்சுரைசர்களில் ஆலிவ் எண்ணெய்

முகம் மற்றும் உடலின் எந்த பகுதியில் தடவினாலும் எளிதில் ஊடுருவிச் செல்லவும் மற்றும் சருமத்தால் எளிதில் கிரகிக்கப்படுவதாகவும் ஆலிவ் எண்ணெய் இருக்கும். பகல் அல்லது இரவு என எந்த வேளைகளிலும் பாதிக்கப்பட்ட தோலை பதப்படுத்தும் பணியை ஆலிவ் எண்ணெய் செவ்வனே செய்யும். ஆலிவ் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் தோலில் தடவினால் உங்கள் சருமம் வழுக்கிச் செல்லும் வகையிலான வழவழப்பையும், புத்துணர்வையும் பெறுவதற்கான பர்ஃபெக்ட் மாய்ஸ்சுரைசர் ரெடி. சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் நெடுநாட்களுக்கு வைத்திருக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இயற்கையான நிவாரணிகளுடன், ஆலிவ் எண்ணெய் கலந்து விற்கப்படும் அழகு சாதன பொருட்களையும் நீங்கள் வாங்கலாம்.

இறந்த செல்களை நீக்கும் ஆலிவ் எண்ணெய்

வறண்ட மற்றும் சொரசொரப்பான சருமங்களை ஆலிவ் எண்ணெய் கொண்டு சிறப்பாக சரி செய்ய முடியும். கடல் உப்புடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தோலில் தேய்க்கும் போது இறந்த தோல் பகுதி நீக்கப்பட்ட மற்றும் வறண்ட தோல் பகுதி புத்துயிர் பெறும். லாவண்டர் எண்ணெயுடன் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை கலந்து குளியல் போட்டுப் பாருங்கள் - அற்புத அனுபவம் கிட்டும். இது தோலை ஆற்றுப்படுத்துகிறது, உடலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு செல்லையும் அமைதிப்படுத்துகிறது.

நகம் மற்றும் புறத்தோல் பாதுகாப்பு

நமது நகங்களும், வெளித்தோல் பகுதியும் தான் அதிகளவில் சேதமடைகின்றன. இவை கடுமையான சுற்றுச்சூழல்களை எதிர்கொள்வதால் அவற்றிற்கு முறையான பராமரிப்பு அவசியம். அதிகபட்சமாக சுத்தமான ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி வறண்ட நகங்கள் மற்றும் வெளித்தோல்களை பாதுகாக்க முடியும். இவற்றிற்கு ஆழமான மசாஜ் தேவையில்லை. மெதுவாக ஆலிவ் எண்ணெயை நகங்கள் மற்றும் வெளித்தோல் பகுதிகளில் தேய்த்து விட்டாலே போதும். அந்த இடங்களில் ஈரப்பதம் ஆழமாக நிலைநிறுத்தப்படும்.

மேக் அப்பை கலைக்க வேண்டுமா...

கண்கள் மிகவும் உணர்வுப்பூர்வானவை. அங்கே நாம் வேறெந்த செயற்கைப் பொருட்களையும் நம்பக் கூடாது. கண்களில் தடவப்பட்டுள்ள மேக்கப் பொருட்களை சுத்தமாக துடைத்தெடுக்க ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் இருந்தால் போதும். கண்ணின் உணர்வு மிக்க பகுதிகளை பாதிக்காமல் ஆலிவ் எண்ணெய் அங்குள்ள மேக்கப்களை நீக்கி விடும். இந்த நிவாரணத்தை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் வேளைகளில், கண்களைச் சுற்றியுள்ள தோலில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படவும் மற்றும் அந்த பகுதி மிகவும் மென்மையாக இருக்கவும் செய்ய முடியும்.

தலைமுடி பராமரிப்பும்.. ஆலிவ் எண்ணெயும்..

தலைமுடியில் ஆலிவ் எண்ணெய் செய்யும் சாதனைகளுக்காக நாம் தலை வணங்க வேண்டும். இந்த அற்புதமான எண்ணெய் தலைமுடியை மென்மையாக்குவதுடன், அதற்கு பிரகாசத்தையும் கொடுக்கிறது. ஆலிவ் எண்ணெயை ஆழமாக முடிகளில் தடவி மசாஜ் செய்தால் அது பொடுகுகளை கட்டுப்படுத்தவும் மற்றும் ஆழமான கன்டிஷனர் ஆகவும் செயல்படுகிறது. தலைக்கு ஷாம்பு போட்ட பின்னர் ஆலிவ் எண்ணெயை தண்ணீருடன் கலந்து மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு மசாஜ் செய்த 5 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமுடியை தண்ணீர் கொண்டு நன்றாக அலசுங்கள். இதற்குப் பின்னர் உங்கள் முடிக்கு கிடைக்கும் பொலிவும் அழகும் அளப்பரியதாக இருக்கும்.

English summary

Amazing Beauty Benefits Of Olive Oil

Olive oil is natural and a great remedy for skin. A beautiful and clear skin tone is what this oil has to offer. So lets unfold some beauty secrets of this miraculous oil.
Story first published: Saturday, January 4, 2014, 17:24 [IST]
Desktop Bottom Promotion