For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நக சுத்தியைக் குணப்படுத்த 8 சிறந்த தீர்வுகள்!!!

By Karthikeyan Manickam
|

நம்மில் சிலர் நக சுத்தியால் அவதிப்பட்டிருப்போம் அல்லது நக சுத்தியால் அவதிப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவதையே நக சுத்தி என்று சொல்கிறோம்.

நம் நகத்தில் உள்ள நிறத்தைப் போக்குவதோடு நக சுத்தி கடுமையான வலியையும் கொடுக்கிறது. நக சுத்தி வந்தால் அதை உடனடியாகக் குணப்படுத்துவது அவசியம். இல்லையென்றால் அது செப்டிக்காகி விரலுக்கே ஆபத்தாகி விடும்.

நக சுத்தியைக் குணப்படுத்த பல மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். இதனால் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் வேறு வழிகளையே நாடுகின்றனர். சிலர் பாதிக்கப்பட்ட விரலில் எலுமிச்சம்பழத்தை சொருகி வைத்திருப்பார்கள்.

நம் வீட்டில் இருக்கும் சில சாதாரணப் பொருட்களைக் கொண்டே நக சுத்தியை எளிதில் குணப்படுத்த முடியும். மருத்துவ ரீதியாக அவை நிரூபிக்கப்படாவிட்டாலும், அவை நக சுத்தியை ஆற்றுகின்றன என்றே சொல்லலாம். இதற்காக ஆகும் செலவும் குறைவே! அத்தகைய சில தீர்வுகள் பற்றி நாம் பார்க்கலாம்.ஃ

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வினிகர்

வினிகர்

இது மிகவும் சீப்பான சிகிச்சை ஆகும். ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் பாதிக்கப்பட்ட விரல்களை சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். குளிர்ந்த நீர் மற்றும் சுடுநீர் ஆகிய இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். காலை, பகல், மாலை என்று 3 வேளைகளிலும் இவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் கால்களைத் துடைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைட்டமின் ஈ எண்ணெயை தேய்க்க வேண்டும்.

விக்ஸ்

விக்ஸ்

இது நக சுத்திக்கு ஒரு எளிய தீர்வாகும். விக்ஸ் வேப்போரப்பை பாதிக்கப்பட்ட நகத்தில் நன்றாகத் தேய்த்து, அப்படியே காற்றில் ஆற விட வேண்டும் அல்லது பாண்ட்-எய்டு கூட பயன்படுத்தலாம். காலை மற்றும் இரவு நேரங்களில் இச்சிகிச்சையை செய்யலாம்.

உப்பு நீர்

உப்பு நீர்

நக சுத்தியைக் குணப்படுத்துவதில் உப்பு நீரின் பங்கு அலாதியானது. நீங்கள் கடலோரத்தில் இருந்தால், கடல் நீரில் பாதிக்கப்பட்ட விரல்களை அமிழ்த்தி வைக்கலாம். கடல் நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் உள்ள உப்பு நீரைக் கொண்டே முயற்சிக்கலாம். வேறு ஒரு வழியும் உள்ளது.

ஒரு பேசனில் விரல் முழுவதும் முழுகுமாறு நீரை ஊற்றவும். பின்னர் அதில் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து பாதிக்கப்பட்ட பகுதியை கல் உப்பில் சுமார் 3 நிமிடங்களுக்கு வைக்கவும். பின்னர் கல் உப்பை பேசனில் போட்டு, அந்த நீரில் விரலை மீண்டும் அரை மணிநேரம் அமிழ்த்தி வைக்கவும்.

பின்னர், துடைத்து விட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் வினிகரைத் தடவ வேண்டும். நக சுத்தி ஆறும் வரை இதைத் தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். காலில் நக சுத்தி என்றால் சிறிது நாட்களுக்கு ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

சோடா உப்பு

சோடா உப்பு

சோடா உப்பு பசையை பாதிக்கப்பட்ட விரலில் தடவினால் நக சுத்தி குணமாகும். சோடா உப்பில் அல்கலைன் நிறைந்து இருப்பதால், நக சுத்தி ஏற்படக் காரணமாக இருக்கும் பூஞ்சைகளோ பாக்டீரியாவோ மேலும் வளராமல் அதனால் தடுக்க முடியும். ஷூக்களின் உள்ளேயும் சோடா உப்புப் பசையைத் தடவினால், கால் நக சுத்தி நீங்கும்.

லெமன் கிராஸ் எண்ணெய்

லெமன் கிராஸ் எண்ணெய்

ஒரு அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் அல்லது திராட்சை விதை எண்ணெயுடன் 12 சொட்டுக்கள் லெமன் கிராஸ் எண்ணெயைக் கலந்து பாதிக்கப்பட்ட விரலில் தடவலாம். பூஞ்சை மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் இதில் நிறைந்து இருப்பதால், இது நக சுத்திக்கு இது ஒரு அருமையான மருந்தாகும். ஒரு நாளைக்கு 3 முறை லெமன் கிராஸ் டீ குடித்தாலும் நல்லதே!

மஞ்சள்

மஞ்சள்

நீரில் மஞ்சள் எண்ணெயை நன்றாகக் கரைத்து அதைப் பாதிக்கப்பட்ட நகத்தில் தடவ வேண்டும். ஒரு நாளுக்கு 3 முறை இதைச் செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும், ஒரு நாளுக்கு 3 முறை 300 மிலி மஞ்சள் எக்ஸ்ட்ராக்டையும் குடித்தால் மிக மிக நல்லது.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பூஞ்சைக்கு எதிரான பண்புகள் வேப்ப எண்ணெயில் மிகுந்து இருப்பதால் இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

பொதுவாகவே தேங்காய் எண்ணெய்க்கு காயங்களை ஆற்றும் தன்மை உள்ளது. நக சுத்திக்குக் காரணமான பூஞ்சைகளையும் பாக்டீரியாக்களையும் கொல்வதோடு, நக சுத்தியால் ஏற்படும் வலியையும் தேங்காய் எண்ணெய் குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Best Home Remedies For Toenail Fungus

There are a number of prescription drugs available to cure the problem, but many of these medications can cause side effects like liver damage, which can be quite severe. Hence, people affected by this condition look for alternative remedies to heal toenail fungus.
 
Desktop Bottom Promotion