For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் வியர்வை துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள்!!!

By Maha
|

அக்னி வெயில் அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அனலானது அதிகம் இருக்கும் போது, உடலில் இருந்து வியர்வையும் அதிகம் வெளியேறும். ஆகவே அதிக வெப்பம் இருக்கும் கோடைக்காலத்தில் நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வியர்வை அதிகம் வெளியேறாமல் இருக்க நம்மை நாம் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயல வேண்டும். இல்லாவிட்டால், வியர்வை துர்நாற்றத்தினால் யாரும் உங்கள் அருகில் கூட வரமாட்டார்கள்.

இத்தகைய வியர்வை துர்நாற்றத்தை தடுக்க தற்காலிகமாக பெர்ஃயூம் இருந்தாலும், வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒருசிலவற்றைப் பின்பற்ற வேண்டும். இங்கு அப்படி கோடையில் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒருசில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தமாக இருங்கள்

சுத்தமாக இருங்கள்

வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க, முதலில் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் நல்ல வாசனை மிகுந்த சோப்புகளைப் பயன்படுத்தி, குறைந்தது 2 முறையாவது குளியுங்கள். மேலும் குளித்த பின்னர் உடலுக்கு பவுடர் பயன்படுத்துங்கள். இதனால் சரும துளைகள் அடைக்கப்பட்டு, வியர்வை அதிகம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

தற்போதைய காலத்தில் மன அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டால், உடலில் வியர்வையானது அதிக அளவில் வெளியேறும். அதனால் தான் இன்டர்வியூ செல்லும் போதும், பரீச்சைக்கு செல்லும் போதும் பலர் மன பதட்டத்தில் வியர்வையில் குளித்துவிடுகிறார்கள். இத்தகைய வியர்வையைத் தடுக்க மன அழுத்தத்தைத் தடுக்கும் வழிகளில் ஈடுபட்டு, மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.

சரியான உடை

சரியான உடை

கோடையில் முக்கியமாக சரியான உடையை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். குறிப்பாக தளர்வான உடைகளை உடுத்த வேண்டும். அதிலும் நல்ல காட்டன் ஆடையை தேர்ந்தெடுத்து உடுத்தினால், வியர்வை துர்நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.

உணவுகள்

உணவுகள்

கோடைக்காலத்தில் உடலில் வியர்வை துர்நாற்றம் வீசுவதற்கு மற்றொரு காரணம் உண்ணும் உணவுகள் தான். அதிலும் காரமான உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, வியர்வையானது அதிகம் வெளிவரும். எனவே கார உணவுகளை கோடையில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

பாதங்களுக்கு உப்பு நீர்

பாதங்களுக்கு உப்பு நீர்

பாதங்கள் தான் மிகவும் மோசமான வியர்வை துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் இடம். அதிலும் ஷூ, ஷாக்ஸ் அணிந்திருப்பவர்களின், கால்களில் கடுமையான துர்நாற்றம் வீசும். எனவே அத்தகைய துர்நாற்றத்தை போக்க, தினமும் வெதுவெதுப்பான உப்பு நீரில் பாதங்களை ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.

புகைக்கு பை செல்லுங்கள்

புகைக்கு பை செல்லுங்கள்

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிலும் இவை வாய் துர்நாற்றத்துடன், உடல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். ஆகவே இந்த உடல் துர்நாற்றத்தை தடுக்க புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலையில் எண்ணற்ற கெமிக்கல்கள் இருப்பதால், அவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உடல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

இயற்கையான டியோ

இயற்கையான டியோ

உடலிலேயே அக்குள் தான் மிகவும் சிறிய பகுதி. அப்பகுதியில் இருந்து தான் துர்நாற்றம் அதிகம் வீசும். எனவே அப்பகுதியில் இயற்கையான டியோக்களான டீ ட்ரீ ஆயில் அல்லது விட்ச் ஹாசில் ஆயில் போன்றவற்றை தடவி வந்தால், அவற்றில் உள்ள ஆன்டி-செப்டிக் குணம், அக்குளில் வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Natural Tips To Prevent Body Odour During Summer

There are many natural remedies for body odour that will last the whole day. They are easy to do also. Here we are going to describe seven natural ways to prevent body odour:
Story first published: Thursday, May 15, 2014, 11:42 [IST]
Desktop Bottom Promotion