For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகுப் பராமரிப்பில் சமையல் சோடா எப்படி பயன்படுகிறது?

By Boopathi Lakshmanan
|

வருடம் முழுவதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிக்காக காசைக் கொட்டோ கொட்டென்று கொட்டும் பெண்கள் பலரும் உண்டு. ஆனால், இவ்வாறு உயர்ந்த விலையில் வாங்கும் அழகுப் பொருட்களுக்குப் பதிலாக, மிகவும் குறைவான செலவில் நம் வீட்டிலேயே கிடைக்கும் ஒரு அழகு சாதனப் பொருளை நீங்கள் பயன்படுத்த முடியும்.

அந்த வகையில் உங்கள் முன் இன்று அறிமுகம் செய்து வைக்கும் பொருள் தான் சமையல் சோடாவாகும். சமையல் சோடாவைக் கொண்டு தலைமுடி, சருமம், நகம் மற்றும் உடலின் பிற பகுதிகளை எப்படி அழகுப்படுத்திட முடியும் என்பதை தெரிந்து கொள்வோமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடிக்கு...

தலைமுடிக்கு...

ஷாம்புக்கள், சீரம்கள் என பல்வேறு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு தலைமுடியின் எண்ணெய் பிசுக்கு போன்ற பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். ஆனால், இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையெல்லாம் சிறிதளவு சமையல் சோடா மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை, சிக்கலான முடியை சரிசெய்ய பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து முடியில் தேய்த்துக் கொண்டு, அரை தேக்கரண்டி சமையல் சோடாவை கலந்துள்ள தண்ணீரில் நன்றாக அலசி விடுங்கள். இதனால் மிகவும் சிறப்பான சுத்தம் செய்யும் குணத்தைக் கொண்டிருக்கும் சமையல் சோடா, எண்ணெய் பிசுக்குகள் மற்றும் சிக்கலான முடி போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும். ஹேர் ஸ்ப்ரே, கண்டிஷனர்கள் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் சமையல் சோடா சரிசெய்யும்.

பளிச் பற்களுக்கு...

பளிச் பற்களுக்கு...

ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் டென்சிட்டியில் வெளியிடப்பட்டுள்ள சில கட்டுரைகளில் சமையல் சோடா கலந்திருக்கும் பற்பசைகள் மிகவும் சிறப்பாக கிருமிகளை நீக்கம் செய்வதுடன், பற்களையும் பளிச்சிடச் செய்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மற்ற எந்தப் பொருட்களையும் விட, மிகவும் சிறப்பான முறையில் சமையல் சோடா பற்களை வெண்மைப்படுத்துகிறது. வீட்டிலேயே இந்த பற்களை வெண்மையாக்கும் அழகு சாதனப்பொருளை தயாரிக்க வேண்டுமா? உங்களுடைய பற்களிலிருந்து காபி கறைகளை நீக்க வேண்டுமா? ஸ்ட்ராபெர்ரி மற்றும் சமையல் சோடா கலந்த சக்தி வாய்ந்த கலவையை பயன்படுத்துமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் இதிலுள்ள மாலிக் அமிலம், இயற்கையாகவே கறைகளை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து, சமையல் சோடாவுடன் பசை போல கலந்து கொள்ளவும். இந்த பசையை கொண்டு பற்களை சில நிமிடங்களுக்கு தேய்த்து, வாய் கொப்புளிக்கவும். இதன் பின்னர், பற்பசையை பயன்படுத்தி எஞ்சியுள்ள அழுக்குகளை நீக்க பல் தேய்க்கவும்.

எச்சரிக்கை: இந்த வழிமுறையை ஒரு மாதத்திற்கு 2 அல்லது 3 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அளவுக்கு அதிகமான மாலிக் அமிலம் பற்களின் எனாமலை பாதிக்கும்.

சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க...

சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க...

உங்களுடைய சருமம் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அங்கே சமையல் சோடா தான் சிறந்த நிவாரணி. சமையல் சோடாவையும், தண்ணீரையும் சேர்த்து, சுத்தமான துணி அல்லது பருத்தி துணியைக் கொண்டு சூரிய கொப்புளம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, அரிப்பை ஏற்படுத்தும் பூச்சிக் கடிகள், தேனி கடி மற்றும் விஷமுள்ள அரிப்புகள் போன்றவற்றையும் கூட சமையல் சோடா மற்றும் தண்ணீர் கலந்த சமையல் சோடா பசை எதிர்க்கவல்லது என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜி குறிப்பிடுகிறது.

சிறந்த வாசனை திரவியம்

சிறந்த வாசனை திரவியம்

டியோடரண்ட்களுக்குப் பதிலாகவும் கூட நீங்கள் சமையல் சோடாவை பயன்படுத்தலாம். கையளவு சமையல் சோடாவுடன், தண்ணீரைக் கலந்தால் கிடைக்கும் பசை உங்களுடைய சாதாரண டியோடரண்ட்டை விட இரட்டை மடங்கு அதிக பலன் தரும். இதனை உருவாக்குவது உங்களுக்கு கடினமானதாக இருந்தால், சோள மாவை சிறதளவு சேர்த்துக் கொள்ளவும். மேலும் சமையல் சோடாவை உங்களுடைய ஷூக்களில் தெளித்து, டியோடரைஸராக பயன்படுத்தலாம்.

சுத்தமான நகம்

சுத்தமான நகம்

மஞ்சளடைந்த நகங்கள் வயதான தோற்றத்தைக் காட்டும். ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் பசையை பயன்படுத்தி நகத்தை சுத்தம் செய்யலாம் என்கிறார் நக அழகு வல்லுநர்கள். நக ஸ்க்ரப் பிரஷ்ஷை பயன்படுத்துவதன் மூலம் நகங்களுக்கு அடியிலும், மேலும் அழகுப்படுத்த முடியும் என்பது அவர்களுடைய பரிந்துரை. இதற்காக சில நிமிடங்கள் உட்கார்ந்து, நகங்களை அலசினால் போதும். எனினும், உங்களுடைய நகம் தொடர்ந்து மஞ்சள் நிறமாக இருந்தால், அது பூஞ்சைத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையைப் பெறத் தவற வேண்டாம்.

இறந்த செல்களை நீக்க...

இறந்த செல்களை நீக்க...

சமையல் சோடா ஒரு சிறந்த உலர் சரும நீக்கியாகவும் செயல்படும். அதற்கு 3 பங்கு சமையல் சோடா, 1 பங்கு தண்ணீர் என கலவையாக்கி கலந்து, முழங்கை, பாதம், கைகள் அல்லது சரும நீக்கம் செய்ய வேண்டிய இடம் ஆகிய இடங்களில் தடவிக் கொள்ளவும். எனினும், தோல் வெட்டுப்பட்டுள்ள இடங்களில் இந்த கலவையை பயன்படுத்த வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Little-Known Uses For Baking Soda Outside The Kitchen

Find out how to use plain old baking soda to get great hair, skin, nails, and more.
Story first published: Saturday, November 1, 2014, 17:02 [IST]
Desktop Bottom Promotion