For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்....

By Maha
|

குளிர்காலம் வந்தாலே அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் உதடு வறட்சி. ஏனெனில் இக்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால், உதடுகளில் ஈரப்பசையானது விரைவில் போய்விடும். அதுமட்டுமின்றி சிலர் தண்ணீர் மிகவும் குறைவாக குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்து வறட்சியடைவதுடன், அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதாலும் உதடுகளானது விரைவில் வறட்சியடைகிறது.

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

இப்படி குளிர்காலத்தில் உதடுகளானது வறட்சியடைந்தால், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு வலியை அனுபவிக்கக்கூடும். எனவே குளிர்காலத்தில் உதடுகள் வறட்சியடையாமல் இருப்பதற்கு உதடுகளில் எப்போதும் ஈரப்பசை இருக்குமாறு செய்ய வேண்டும். அதற்கு உதடுகளுக்கு ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரித்து சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இங்கு உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் ஒருசில இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணெய்

எண்ணெய்

உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உதடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் சிறந்தது என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை இருப்பதால், அவற்றை உதடுகளுக்குப் பயன்படுத்தும் போது, உதடுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். மேலும் இதன் ஜெல்லை தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், அவை வறட்சியைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையடையவும் செய்யும்.

தேன்

தேன்

தேனில் ஈரப்பசையைத் தக்க வைக்கும் குணம் உள்ளது. எனவே இந்த தேனை கிளிசரினுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். வேண்டுமானால் பகலில் கூட பயன்படுத்தலாம்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்தால், அவை உதடுகளில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றிவிடுவதோடு, உதடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை விரைவில் குணமாக்க உதவும். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் ஸ்கரப் செய்தால் இன்னும் சிறந்தது.

ரோஸ்

ரோஸ்

பெண்களுக்கு உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அத்தகையவர்கள் ரோஜாப்பூ இதழ்களை பாலில் சேர்த்து ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம் அல்லது பகல் நேரத்தில் லிப் பாம் போன்று பயன்படுத்தலாம்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்மில் எண்ணெய் பசை அதிகம் இருக்கும். எனவே அதனை உதடுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால், உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அதன் சாற்றினை உதடுகளுக்கு தடவி வந்தாலோ அல்லது தினமும் அதனை உட்கொண்டு வந்தாலோ, உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Home Remedies To Heal Dry, Chapped Lips

You don't always need lip balm to soothe dry lips. Here are a few home remedies to heal dry, chapped lips.
Desktop Bottom Promotion