அழகுக்கு அழகூட்டும் அற்புதமான செக்ஸ்!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு கிக்கான சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும் விஷயமல்ல. அது மறைமுகமாக நம் உடலுக்குப் பலவிதமான நன்மைகளைக் கொடுக்கிறது.

ஏற்கனவே அட்டகாசமாக இருக்கும் நம்முடைய அழகு, உடலுறவுக்குப் பிறகு மேலும் அழகாகிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக, நம் சருமம் மற்றும் கூந்தலை அது அதிக அழகாக்கிக் காட்டுவதை ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனவே, ஏதோ கடமைக்காகவும் ஐந்து நிமிட சந்தோஷத்திற்காகவும் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் உடலுறவில் இறங்கினால், அது நம் அழகை மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உடலுறவு நம்மை எப்படி அழகாக்குகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தோல் சுருக்கங்கள் அகலும்

இன்றைய பரபரப்பான உலகில் அதிகமாக வேலை செய்வது, குறைவாகத் தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு, சிறு வயதிலேயே வயோதிகத் தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்தக் குறையை உடலுறவு போக்குகிறது. உடலுறவின் போது, வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகின்றன.

சருமம் பளபளக்கும்

உங்கள் மேனி பளபளப்பாக வேண்டுமா? அப்படியானால் அடிக்கடி உடலுறவு கொள்ளுங்கள். உடலுறவு கொள்ளும் போது, உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வியர்வையாக வெளியேறி விடுகிறது. உடலுறவுக்கு முன்னும் பின்னும் உங்கள் மேனியைக் கண்ணாடியில் பாருங்கள். உடலுறவின் சூட்சமம் அப்போது புரியும்!

இளமைக்கு வழிவகுக்கும்

தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வருவதால், நமக்கு ஆறேழு வயது குறைந்தது போலத் தோன்றும். ஒவ்வொரு உடலுறவுக்குப் பின்னும், வயோதிகத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான ஆக்ஸிடாக்ஸின் வெளியேற்றப்படுவதால், நாம் இளமையான தோற்றத்துடனேயே காணப்படுவோம்.

கூந்தல் ஜொலிக்கும்

உங்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் உள்ளனவா? இதற்கு உடலுறவு மட்டுமே நல்ல தீர்வாகும். உடலுறவின் போது, ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் தலைமுடிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக சரியாகும். இதனால் இரத்த ஓட்டமும் அதிகரிப்பதால், அது சருமத்தையும் அதிக அழகாக்குகிறது.

கொலாஜென் அதிகமாகும்

நம் சருமத்தில் உள்ள கொலாஜென் என்ற பொருள், அந்தச் சருமத்தை இளகும் தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. பொதுவாக, வயதாக வயதாக கொலாஜென் குறைந்து போவதால் சருமம் உலர்ந்து, சுருங்கி வயோதிகம் தலை காட்டுகிறது. இந்த கொலாஜென்னை அதிகரிக்க, அதிக அளவில் உடலுறவு கொள்ள வேண்டும்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Ways Intercourse Makes You More Beautiful

There are various ways which make the skin glow, but nothing can be compared to making love. Here are how intercourse is good for your skin.
Story first published: Thursday, November 27, 2014, 11:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter