For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகைப் பராமரிக்க 15 எளிமையான டிப்ஸ்!!

By Karthikeyan Manickam
|

அழகைப் பராமரிப்பதில் மட்டும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் கேட்கிறவர்களுக்கு ஏதாவது நொண்டிச் சாக்கு கூறிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் ஒரு தாழ்வு மனப்பான்மையும் வந்து விடும்.

பலரும் தாம் அழகாக இருப்பதற்காக பியூட்டி பார்லருக்கு அடிக்கடி படையெடுப்பதுண்டு. ஆனால் செலவு, நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதைத் தவிர்த்து விடுவார்கள். உங்கள் அழகைப் பராமரிக்க ஒவ்வொரு முறையும் பியூட்டி பார்லருக்குப் போக வேண்டும் என்ற அவசியமில்லை.

அகத்தின் அழகு தானே முகத்தில் தெரியும். நீங்கள் உண்ணும் உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி, மனதை அமைதியாக வைத்திருத்தல் என்று சில எளிமையான வழிகளிலும் உங்கள் அழகை மெருகேற்ற முடியும். இப்படி சில எளிமையான வழிகள் மூலம் உங்கள் அழகைப் பராமரிக்க இதோ சில ட்ரிக்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறைய தண்ணீர்

நிறைய தண்ணீர்

சிறிது நீர்ச்சத்து குறைந்தாலும் கூட, உங்கள் உடம்பு தாங்காது. உதட்டில் வறட்சி, சருமத்தில் லேசான தளர்ச்சி ஏற்படும். இதற்கு எப்போதும் இடம் கொடுக்க வேண்டாம். நீங்கள் ஏ.சி. அறையில் இருந்தால் கூட அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நிறைய தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருங்கள். இது உங்கள் மேனியிலும் பிரதிபலிக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் உணவுகள்

ஆன்டி-ஆக்ஸிடண்ட் உணவுகள்

இத்தகைய உணவுகள் உங்கள் உடம்பில் வியாதி வராமல் தடுக்க உதவும். தோல் சுருக்கங்களிலிருந்தும் உடம்பைப் பாதுகாத்து, வயதைக் குறைவாகக் காட்டவும் உதவும்.

சத்தான காய்கறிகள்

சத்தான காய்கறிகள்

நல்ல சத்துமிக்க காய்கறிகளை எப்போதும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வானவில் போன்ற பலவிதமான வண்ணங்களில் கிடைக்கும் அந்தச் சத்தான காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது நம் உடம்பின் வனப்பை அதிகரிக்கும்.

ஆர்கானிக் உணவுகள்

ஆர்கானிக் உணவுகள்

நிறைய ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை அழிக்கலாம்.

அளவான வெயில்

அளவான வெயில்

சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. அதிக நேரம் வெயிலிலேயே அலைந்து திரிவது நல்லதல்ல. வெயிலில் போக நேர்ந்தால் கூலிங் கிளாஸை மறந்து விடாதீர்கள். உடம்பில் சன்ஸ்க்ரீன் லோஷனையும் தடவிக் கொள்ளுங்கள்.

இயற்கை சரும தயாரிப்புகள்

இயற்கை சரும தயாரிப்புகள்

உங்கள் சருமத்திற்கு, இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர்கள் மற்றும் மேக்கப் சாதனங்களையே பயன்படுத்துங்கள்.

நச்சற்ற தயாரிப்புகள்

நச்சற்ற தயாரிப்புகள்

செயற்கையான வேதிப் பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதில் நச்சுத்தன்மை இருக்க அதிக வாய்ப்புள்ளது. அது சருமத்திற்கு நல்லதல்ல.

டேபிளில் குட்டிச் செடி

டேபிளில் குட்டிச் செடி

உங்கள் வீட்டிற்குள்ளேயோ அல்லது அலுவலகத்திற்குள்ளேயோ சிறு செடிகளை வளர்ப்பது நல்லது. அது நீங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வழிவகுக்கும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

சருமத்தின் பொலிவிற்குத் தேவையான வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுகருக்கு 'நோ'

சுகருக்கு 'நோ'

உங்கள் உணவுகளிலும், பானங்களிலும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள். உங்கள் தோலில் அதிக சுருக்கங்களை அது ஏற்படுத்தும்.

சத்தான கொழுப்பு நல்லது

சத்தான கொழுப்பு நல்லது

அவகேடோ பழங்கள், ஆலிவ் எண்ணெய், ஆளி விதைகள், நட்ஸ் மற்றும் மீன் போன்ற உணவுகள் நல்லது. அது உங்கள் மேனியை இளமையாகக் காட்டும்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

நம் உடலைச் சுத்தம் செய்து கொண்டே இருப்பது நல்லது. பல்வேறு பழச்சாறுகளைக் குடித்து இதைச் சாதிக்கலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் நீருடன் எலுமிச்சையைப் பிழிந்து குடிப்பது முக்கியம்.

மன அழுத்தம் வேண்டாம்

மன அழுத்தம் வேண்டாம்

உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடுங்கள். யோகா, தியானம் செய்யலாம். பிரச்சனைக்கு உரியவர்களின் சேர்க்கையைத் தவிருங்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மனம் விட்டு, சந்தோஷமாகப் பேசுங்கள்.

தூக்கம் முக்கியம்

தூக்கம் முக்கியம்

நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் சருமம் 'உயிர்' பெற்றுப் பொலிவடைகிறது. ஒரு நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தூக்கமும் வேண்டும். குறைந்தது 8 மணிநேரத் தூக்கம் நல்லது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் இருக்கும் தேவையில்லாத நச்சுப் பொருட்கள் வியர்வையாக வெளியேறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலே உங்கள் மேனி பளபளப்பாகும். உடற்பயிற்சி செய்யும் போது கொஞ்சம் புன்னகையும் செய்யுங்கள்; அது உங்கள் முகத்தைப் பொலிவாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Simple Tricks To Maintain Beauty

Here are some simple tricks to maintain beauty. Protecting yourself from harmful chemicals while getting enough sleep, relaxation and exercise will all help you maintain a healthy glow.
Desktop Bottom Promotion