For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான மற்றும் வெள்ளையான பற்களைப் பெற சில டிப்ஸ்...

By Maha
|

அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை, புன்னகைக்கும் போதும் உள்ளது. எனவே எப்படி சருமத்திற்கு பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்கிறோமோ, அதேப் போல் பற்களுக்கும், ஈறுகளுக்கும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அன்றாடம் பின்பற்றும் பழக்கங்களில் ஒருசில மாறுதல்களைக் கொண்டு வருவதே ஆகும்.

பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

அப்படி மாறுதல்களைக் கொண்டு வந்தால், நிச்சயம் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, வாய் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கலாம். இங்கு நல்ல ஆரோக்கியமான மற்றும் வெள்ளையான பற்களைப் பெற மேற்கொள்ள வேண்டிய ஒருசில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து மனதில் கொண்டு தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயமாக அழகாகத் திகழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீங்கு உண்டாக்கும் உணவுகள்

தீங்கு உண்டாக்கும் உணவுகள்

உங்களுக்கு பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம். நிச்சயம் அனைவராலும் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்க்க முடியாது. ஆகவே காபி அல்லது டீ குடித்த பின்னர் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

பிரஷ்களை மாற்றவும்

பிரஷ்களை மாற்றவும்

இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

நாக்கை சுத்தம் செய்யவும்

நாக்கை சுத்தம் செய்யவும்

தினமும் காலை மற்றும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருந்து துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இருக்கவும், நாக்கில் உள்ள அழுக்குகளும் முக்கிய காரணமாகும். ஆகவே தவறாமல் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை சுத்தப்படுத்தும் உணவுகள்

பற்களை சுத்தப்படுத்தும் உணவுகள்

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட் போன்றவற்றை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

காலையில் பிரஷ் செய்த பின்னர், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆசிட்டுகளானது பற்களில் தங்கியுள்ள கறைகளை நீக்குவதோடு, வாயில் பாக்டீரியாக்கள் இருந்தால், அவற்றையும் அழித்து வெளியேற்றிவிடும்.

உப்பு

உப்பு

தினமும் பல் துலக்கும் போது பேஸ்ட் மீது சிறிது உப்பு தூவி பற்களை துலக்கி வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறைகள் வெளியேறுவதுடன், வாயில் உள்ள கிருமிகளும் அழியும்.

புதினா சூயிங் கம்

புதினா சூயிங் கம்

அவ்வப்போது வாயில் புதினா சூயிங் கம் போட்டு மென்று வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீக்கப்படுவதுடன், வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இரண்டு வேளை பிரஷ் செய்யவும்

இரண்டு வேளை பிரஷ் செய்யவும்

தினமும் காலை மற்றும் இரவில் பற்களை துலக்க வேண்டும். இதனால் வாயில் பாக்டீரியாக்கள் மற்றும் உணவுத்துகள்கள் தங்கி, வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்ப்பதுடன், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பல்லிடுக்கு நூல் (Dental Floss)

பல்லிடுக்கு நூல் (Dental Floss)

பல்லிடுக்கு நூலை தினமும் காலை மற்றும் இரவில் படுத்த வேண்டும். இதற்கு முக்கிய காரணம், பிரஷ் செய்து வெளியேற்ற முடியாத பற்களுக்கு இடையில் உள்ள உணவுத்துகள்களையும், பல்லிடுக்கு நூலானது எளிதில் வெளியேற்றிவிடும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

முக்கியமாக பெண்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும் போது, சிவப்பு நிறம் அல்லது பவள நிற லிப்ஸ்டிக்கை போட வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக காட்சியளிக்கும். ஒருவேளை வெளிர் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டால், அவை பற்களை மஞ்சள் நிறத்தில் வெளிப்படுத்தும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Tips for Healthy, White Teeth

Not only do your teeth help you talk and chew, they can make or break your appearance. Here are 10 secrets for keeping your pearly whites in tip-top shape.
Desktop Bottom Promotion