For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகாய் திகழ்வதற்கான சில ஆரோக்கியமான 20 வழிகள்!!!

By Super
|

மிக அழகாக இருக்க வேண்டும், பிறர் பாராட்டும் வண்ணம் அழகு வெளிப்பட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தொன்று தொட்டு இருக்கும் ஆசையாகும்.

பொதுவாக பெண்கள் என்றாலே அழகு தான். அந்த அழகை மேலும் மேம்படுத்த பலவித இரசாயன க்ரீம்களைப் பயன்படுத்துவதை விட, தினமும் நமது வாழ்க்கை முறைகளில் சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் பொழுது, இயற்கையாகவே மிகச்சிறந்த அழகை பெற முடியும்.

அதிலும் முறையான சருமப் பராமரிப்பு, முடி பராமரிப்புடன், சரியான உடல் பராமரிப்பும் சேர்ந்து இருந்தால், அது ஒருவரை அழகாக ஆக்குவதோடு, நல்ல தோற்றத்தையும் அளிக்கும். ஆகவே அத்தகைய தோற்றத்திற்கு பின்வரும் அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். அதன் பின் பாருங்கள்! உடல் தோற்றத்தை கண்ணாடியில் கண்டு காதல் கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேய்த்து கழுவுதல்

தேய்த்து கழுவுதல்

ஒழுங்கான முறையில் உடலைத் தேய்த்து கழுவினால், உடலிலுள்ள இறந்த செல்கள் நீங்கி, மீண்டும் அவை வளராமல் தடுக்கலாம். மேலும் தினமும் குளித்த பிறகு மாய்ஸ்சுரைசரை உடல் முழுவதும் தடவ வேண்டும். அதிலும் மாய்ஸ்சுரைசர் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த ஸ்கரப் தேனையும் சர்க்கரையையும் கலந்து தடவுவது ஆகும்.

தண்ணீர்

தண்ணீர்

ஒவ்வொரு நாளும் 8-10 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர்ச்சத்து இழப்பினைத் தடுத்து, சருமம் ஆரோக்கியமாகத் திகழ உதவும்.

அழுக்கினை விரட்டுங்கள்

அழுக்கினை விரட்டுங்கள்

அதிகமாக வியர்க்கிறதா? ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் குளிக்க வேண்டும். நல்லதொரு குளியலானது, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் குளித்த பிறகு, நெகிழ்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

முடி பராமரிப்பு

முடி பராமரிப்பு

அதிகமான வெப்பத்தாலும், மாசடைந்த சூழ்நிலையாலும், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே முடியைப் பராமரிக்க முடிக்கு நல்ல ஷாம்பு போட்டுக் கழுவ வேண்டும். அதிகப்படியான ஷாம்பு பயன்படுத்தும் போது, முடி பொலிவிழந்தும் வறண்டும் போகும். அதிலும் ஷாம்புவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கொண்டால். முடியிலுள்ள அழுக்கும் மாசும் நீங்கும்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு என்னவென்றால், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனைத் தினமும் பயன்படுத்துவது ஆகும். அதற்கு சருமத்திற்குத் தகுந்த அலர்ஜி ஏற்படுத்தாத ஒரு சன் ஸ்கிரீன் லோசனைக் கண்டுப்பிடித்து, பயன்படுத்தினால் சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் தடிப்புகளைத் தடுக்க முடியும்.

கால் விரல்கள்

கால் விரல்கள்

காற்றோட்டம் உள்ள காலணிகளை அணிய வேண்டும். இதனால் பூஞ்சைகள் தொற்று மற்றும் நாற்றம் இல்லாத பாதங்களையும் பெறலாம்.

தயிர்

தயிர்

உணவில் அதிக அளவு தயிரைச் சேர்த்துக் கொள்ளவும். இது சருமத்தினை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் பாதுகாக்கும். அதிலும் முடி மற்றும் சருமத்தின் மீது தயிர் கலவையை பயன்படுத்தும் போது, சருமமும் முடியும் மென்மையாகும். மேலும் சூரிய ஒளியினால் ஏற்படும் தீங்கையும் குறைக்கும்.

ஷேவிங் முறை

ஷேவிங் முறை

ஷேவிங் செய்து கொள்பவராக இருந்தால், குளிக்கும் போது, கையிலும் காலிலும் ஷேவிங் செய்வதற்கு முன், குறைந்தது 3 நிமிடங்கள் காத்திருந்து பிறகு ஷேவ் செய்யவும். அதிலும் இளஞ்சூடான நீரைப் பயன்படுத்தவும். ஷேவிங் செய்து முடித்த பிறகு, படிகாரத்தை குளிர்ந்த நீரில் கலந்து தடவவும்.

தலையணை

தலையணை

பட்டுத் துணி போன்ற மென்மையான தலையணை மற்றும் தலையணை உறையைப் பயன்படுதுவதன் மூலம், தலையணைக்கும் கியூட்டிகள்களுக்கும் இடையில் உள்ள உராய்வைத் தடுக்கலாம். மேலும் முடி உதிர்வதையும் இது தடுக்கும்.

சரும கருமைக்கு குட் பை

சரும கருமைக்கு குட் பை

வெயிலின் காரணமாக எளிதில் சருமம் கருமையடைபவர்கள், இயற்கைப் பொருள்களைக் கொண்டு, இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு முட்டையின் வெள்ளை கரு, சோள மாவு, எலுமிச்சை சாறு கலந்த கலவையை சருமத்தின் மீது தடவ வேண்டும். மாறாக வெட்டிய உருளைக்கிழங்கு அல்லது எலுமிச்சைச் சாறு போன்றவற்றையும் கருமையான இடத்தின் மீது தடவலாம். இம்முறைகள் பயன் தரவில்லையா? அப்படியாயின், உடனே ஒரு சரும நோய் நிபுணரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

முதுகினைப் பராமரிக்கவும்

முதுகினைப் பராமரிக்கவும்

கவர்ச்சியான முதுகினைப் பெறுவதற்கு, முதுகினை தொடர்ந்து எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். அதிலும் பப்பாளிப் பழத்தினை அரைத்து, அதனை சருமத்தின் மீது தடவி 5-10 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் செய்முறை முதுகில் உள்ள இறந்த செல்களை அகற்றி, தூசி மற்றும் அழுக்கிலிருந்து பாதுகாக்கும்.

தலையினைப் பாதுகாக்கவும்

தலையினைப் பாதுகாக்கவும்

தலையில் தொப்பி அணிபவராக இருந்தால், அதன் காரணமாக நெற்றியில் எண்ணெய் படிந்து, பருக்கள் உண்டாகலாம். இதனைத் தவிர்க்க நல்ல க்ளின்ஸர்களைக் கொண்டு நெற்றியை அடிக்கடி துடைத்துக் கொள்ளவும் .

ஆரோக்கியமான பாதங்களைப் பெறுங்கள்

ஆரோக்கியமான பாதங்களைப் பெறுங்கள்

ஷூக்கள் அணிபவராக இருந்தால், கால்களை ஷூக்களுக்குள் நுழைக்கும் முன், பூஞ்சைத் தடுப்பு மருந்தை (anti-fungal powder) தடவிக் கொள்ளவும். மேலும் இறந்த செல்களை நீக்கவும், பாதங்கள் இளமை எழில் பெறவும், மெருகேற்ற உதவும் கற்களைப் (pumice) பயன்படுத்தவும்.

புரோட்டீன் அதிகமுள்ள உணவு

புரோட்டீன் அதிகமுள்ள உணவு

ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சரும நிறத்தைப் பெற, உணவுடன் புரோட்டீன் அதிகமுள்ள கொழுப்பில்லாத மாமிசம், முட்டைகள், பருப்பு வகைகள், பால் மற்றும் பாலாடைக் கட்டி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் அதிகமுள்ள இவ்வகை உணவுகள், ஆரோக்கியமான மற்றும் வலிமையான எலும்புகளையும் பற்களையும் பெறவும் உதவும்.

போதுமான ஓய்வு எடுக்கவும்

போதுமான ஓய்வு எடுக்கவும்

அழகாகத் திகழ வேண்டுமானால், தேவையான தூக்கம் அவசியம். அதே போல், தேவையான அளவு தண்ணீர் குடித்து வர வேண்டும். சருமம் பட்டுப் போல் திகழ, இவை இரண்டும் முக்கியமானவை. ஏனெனில், நல்ல தூக்கத்தினாலும், அதிகமான தண்ணீர் குடிப்பதினாலும், உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் நீங்குகின்றன.

மேக்-கப்பை குறைக்கவும்

மேக்-கப்பை குறைக்கவும்

அதிகமான மேக்-கப் பொருள்கள் சருமத்தில் பயன்படுத்தப்படும் போது, அவை சருமத்தில் உள்ள துவாரங்களை அடைத்து, சருமத்தில் சுருக்கங்களை உண்டாக்கக் கூடும். மேலும், உறங்கப் போகும் முன், சருமத்தின் மீது பயன்படுத்தியிருந்த அனைத்து வேதிப் பொருள்களையும் நீக்கிவிட வேண்டும்.

சுத்தப்படுத்துதல், பதப்படுத்துதல், ஈரப்படுத்துதல்

சுத்தப்படுத்துதல், பதப்படுத்துதல், ஈரப்படுத்துதல்

தினந்தோறும் சருமத்தினை சுத்தப்படுத்துங்கள், பதப்படுத்துங்கள், ஈரப்படுத்துங்கள். இதற்காக சருமத்திற்கு உகந்த தரமான க்ளின்சர் ஒன்றினையும், டோனர் ஒன்றினையும், வாங்கிக் கொள்ளவும். ஒரு தரமான க்ளின்சரானது, அனைத்து இறந்த செல்களையும் நீக்க உதவும். அதோடு, உடலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை சருமத்தின் மீது தடவி, சருமத்தினைச் சிறப்பாக பராமரிக்க உதவும்.

சேனிடைசர்

சேனிடைசர்

அழுக்கடைந்த கைகளைக் கொண்டு முகத்தைத் தொடுவதால், சருமத்தில் பருக்கள் உண்டாகலாம். இதனைத் தடுக்க, வெளியில் செல்லும் போது, கையடக்கமான சேனிடைசர் ஒன்றினை உடன் வைத்திருக்கவும்.

எக்ஸ்ஃபோலியேட்

எக்ஸ்ஃபோலியேட்

வாரம் ஒருமுறையேனும் சருமத்தினை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். சருமத்தின் மீது படிந்துள்ள அனைத்து தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமம் புத்துணர்வுடன் பளபளப்பாகத் திகழ, இது மிகவும் உதவும்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

தலைமுடியை நன்கு அலசிய பிறகு, நல்ல கண்டிஷனரைக் கொண்டு முடியைக் கண்டிஷன் செய்ய வேண்டும். இதனால் சுற்றுப்புற மாசினால் தலைமுடி சிக்கடைவதையும், முடி பாதிக்கப்படைவதையும் தடுக்கலாம். குறிப்பாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி தலைமுடியை உலர வைப்பதைக் குறைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 Ways to Be Beautiful in a Healthy Way

Being beautiful is a perennial wish women have in their minds. Proper skin care and hair care clubbed rightly with body care gives one beauty and good looks.
Desktop Bottom Promotion