For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்!!!

By Super
|

இயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம். வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்ல. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை சருமத்திற்கு, கூந்தலுக்கு மற்றும் உடலுக்கு கேடுகள் விளைவிப்பவை என்றும் அனைவரும் நன்றாக அறிவோம்.

எனவே, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி வரும் இயற்கையான பொருட்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உடலை அழகாகப் பராமரிப்பதற்காக, சில அழகுக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைச் செய்து வந்தால் உடல் மற்றும் முகம் இயற்கை வழியிலேயே அழகு பெறுவதுடன், மனதுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியை அளிக்கும். எனவே இவற்றை உடலை இயற்கை வழியில் மேலும் மெருகேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டு பின்பற்றிப் பாருங்களேன்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க்

சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க்

சுருக்கமில்லாத சருமத்துடன் எப்போதும் இளமையாகத் தோன்றுவதையே அனைவரும் விரும்புவோம். எலுமிச்சைச் சாறு, தேன், சாத்துக்குடிச் சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொண்டு, சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிருக்கு இயற்கையிலேயே, ப்ளீச் செய்யும் குணம் உண்டு என்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இக்கலவையைப் பயன்படுத்தினால் காணாமல் போகும்.

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கரு

முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை மென்மையாக தோற்றமளிப்பதற்கு மற்றுமொரு அழகுக் கலவையும் உண்டு. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக ஒரு கரண்டியினால் கலக்க வேண்டும். அதன்பின் அந்த கலவையை கண்கள், தாடைகள், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பூச வேண்டும். பின் அவை நன்றாக காய்ந்த பிறகு கழுவித் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு தவறாது செய்து வந்தால், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவை மெல்ல மறைவதைக் காண முடியும். சுருக்கங்கள் மறைவதனால், இளமையான தோற்றமும் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்களை வட்டவடிவிலான துண்டுகளாக வெட்டி, அவற்றைக் கண்கள் மீது சிறிது நேரம் வைத்து வந்தால், அது கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் நீங்கும். மேலும் இத்தகைய வெள்ளரிக்காயைக் கொண்டு சிறந்த ஃபேஷியல் மாஸ்க் செய்யலாம். அதற்கு சிறிய வெள்ளரிக்காயை, ஓட்ஸ் உடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, தயிருடன் கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

திராட்சை

திராட்சை

திராட்சைப் பழங்கள் ஒரு அற்புதமான க்ளின்சர்களாகச் செயல்படும். எனவே அவற்றை எடுத்து சாதாரணமாக முகத்தில் அழுத்தித் தேய்த்தாலே போதும். முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்.

எலுமிச்சை, முட்டை ஃபேஸ் மாஸ்க்

எலுமிச்சை, முட்டை ஃபேஸ் மாஸ்க்

முகத்தில் பருக்களும், சிறு கட்டிகளும் நிறைந்து அவஸ்தைப்படுவோருக்கு பயன் தரும் சிறப்பான மாஸ்க். எலுமிச்சை சாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இக்கலவையை முகத்தில் பிரச்சனை உள்ள பகுதிகளில் தடவி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால், முகத்தில் உள்ள பருக்களும் சிறு கட்டிகளும் நீங்கும்.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

பளிச்சிடும் நிறத்தில் சருமம் பிரகாசிக்க மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூள், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பால், சந்தனப் பவுடர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இக்கலவையை தினமும் முகத்தில் பூசிவந்தால், முகம் மாசு மருவின்றிப் பொலிவுடன் திகழும்.

ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க்

ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க்

எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தின் விளைவாக முகத்தில் பரு மற்றும் தோல் தடித்தல் உண்டாகும். மேலும் சருமத்திலுள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக எண்ணெய் சுரக்கும். ஈஸ்ட்டுடன் சிறிது தயிரை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிவதைக் குறைத்து பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.

தேயிலைத்தூள் பை

தேயிலைத்தூள் பை

கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை (tea bags) 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும். இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு. மேலும் இந்த முறை தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும் இது உதவுகிறது.

சோள மாவு மற்றும் வாழைப்பழம்

சோள மாவு மற்றும் வாழைப்பழம்

சோள மாவும், வாழைப்பழங்களும் நம் வீடுகளில் எப்போதும் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு, பாதங்களில் தடவி, பின்பு பாதங்களை 30 வினாடிகளுக்கு மசாஜ் செய்தாலே போதும். உடனடியாகவே பாதங்கள் மென்மையாவதை உணர முடியும். சோள மாவு ஒரு சிறந்த எக்ஸ்ஃபொலியேட்டராக (exfoliator) செயலாற்றி, பாதங்களிலுள்ள சருமத்தின் கடினத்தன்மையைப் போக்கும். மேலும் இதில் உள்ள வாழைப்பழமானது பாதங்களை மென்மையாக்கும்.

தேயிலைத்தூள் பை

தேயிலைத்தூள் பை

கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு, ஈரமான தேயிலைத்தூள் பை (tea bags), வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால், உடனடியான பலனை உணரலாம்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொருமுறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.

ஆரஞ்சு ஸ்டிக்

ஆரஞ்சு ஸ்டிக்

அதற்கு ஆரஞ்சு ஸ்டிக் ஒன்றை கொண்டு நகங்களைச் சுத்தம் செய்து நகங்களின் முனையைத் தேய்த்து மழுங்கச் செய்யலாம். சுத்தமான சோப்புத் தண்ணீரில் கைகளை 5 நிமிட நேரம் நனைக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் கொண்டு தினந்தோறும் விரல் நுனிகளை மசாஜ் செய்தால். உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

அழகான உதடுகளை பெற

அழகான உதடுகளை பெற

உதடுகள் வறண்டு போகும் தன்மை உடையவையாக இருந்தால், பாதாம் எண்ணெய் தடவிவாரவும். குளிர்காலங்களில் உதடுகள் வெடிக்கின்றனவா? ஆமெனில் சிறிது தேனைத் தடவலாம். இயற்கையான அழகுடன் உதடுகளைப் பெற வேண்டுமென விரும்பினால், உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Tips From Home For The Perfect Look Always

Who does not crave for pure and natural beauty? We all wish to look beautiful and preferably with minimal use of chemically enriched cosmetics. These cosmetics are not only highly priced but are also very harmful for our skin and body in the long run.
Desktop Bottom Promotion