For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! மென்மையான சருமம் வேண்டுமா? அதற்கு இதோ சில டிப்ஸ்...

By Maha
|

ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் அது தவறான கருத்து, ஆண்களும் பெண்களைப் போன்றே நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு போதிய நேரம் கிடைக்காததால், சருமத்தை பராமரிக்க முடியவில்லை. ஆனால் அவ்வாறு ஆண்கள் சருமத்தை பராமரிப்பதற்கு என்று எந்த ஒரு கஷ்டமான முறையையும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. அன்றாடம் அவர்கள் செய்யும் ஒருசில செயல்களை சரியாக செய்து வந்தாலே, அவர்கள் அழகாக இருப்பார்கள்.

மேலும் ஆண்களின் சருமம் மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய சருமத்தையும், அன்றாட செயல்கள் மூலம் மென்மையாக மாற்றலாம். குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்கு இருக்கும் அழகுப் பொருட்களைப் போன்றே பல்வேறு அழகுப் பொருட்கள் தற்போது மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி சரியாக பயன்படுத்தி வந்தாலும், சருமம் மென்மையாவதோடு, அழகாகவும் இருக்கும்.

இப்போது ஆண்களின் சருமம் மென்மையாக இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷேவிங்

ஷேவிங்

எப்போதும் ஷேவிங் என்று சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் தினமும் ஷேவிங் செய்தால், முகம் பார்ப்பதற்கு அழகாக, பெண்களை கவரும் வகையில் இருக்கும்.

ஃபேஸ் வாஷ்

ஃபேஸ் வாஷ்

ஆண்கள் எப்போதும் முகத்தை கழுவ வேண்டுமெனில் சோப்பைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு சோப்பை பயன்படுத்தினால், சருமத்தில் வறட்சி தான் ஏற்படும். எனவே குளிக்கும் வேளையைத் தவிர, மற்ற நேரங்களில் மைல்டு ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். அதுவும் தினமும் குறைந்தது இரண்டு முறை கழுவ வேண்டும்.

ஸ்கரப்

ஸ்கரப்

ஆண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகம். எனவே சருமத்தை பராமரிக்க ஸ்கரப் செய்ய யோசிப்பார்கள். ஆனால் ஸ்கரப்பை வாரத்திற்கு மூன்று முறை செய்தால், பொலிவிழந்து இருக்கும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு அழகாக காணப்படும்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

பெண்கள் மட்டும் தான் வெளியே செல்லும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பெண்களை விட ஆண்களுக்கு தான் சன் ஸ்கிரீன் மிகவும் முக்கியமானது. எனவே தவறாமல் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

முகப்பரு

முகப்பரு

ஆண்களுக்கு முகப்பரு வருவதற்கு பெரும் காரணம் தாடி தான். ஏனெனில் சரியான ஷேவிங் இல்லாவிட்டாலும், முகப்பரு வரும். ஆகவே இத்தகைய முகப்பருக்களைப் போக்குவதற்கு, ஷேவிங் செய்து, பருக்களை போக்கும் ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.

சரும ஜெல்

சரும ஜெல்

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமானது வறட்சியான சருமம் தான். ஏனெனில் அவர்கள் எந்த ஒரு க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தமாட்டார்கள். வேண்டுமெனில் அதற்கு பதிலாக குளித்த பின்பு, சருமத்தை ஈரப்பசையுடன் வைக்கும் சரும ஜெல்லை உடலுக்கு தேய்க்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

பாடி லோஷன்

பாடி லோஷன்

பெண்கள் தான் இரவில் படுக்கும் போது கோல்டு க்ரீம்களை பயன்படுத்துவார்கள். இத்தகைய க்ரீம்களை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, ஆண்களும் பயன்படுத்தலாம். அதுவும் இரவில் படுக்கும் முன் உடல் முழுவதும் தடவிக் கொண்டு தூங்கினால், சரும செல்கள் குளிர்ச்சியடைந்து, எப்போதும் ஈரப்பசையுடனேயே இருக்கும்.

முதுகுக்கான ஸ்கரப்

முதுகுக்கான ஸ்கரப்

பொதுவாக ஆண்கள் குளிக்க சென்றால், காக்கா குளியல் தான் குளிப்பார்கள். இதனால் முதுகுப் பகுதியில் நிறைய அழுக்குகள் தங்கியிருக்கும். இத்தகைய அழுக்குகளை நீக்க சரியான ஸ்கரப்பர் அல்லது அம்மா அல்லது மனைவியை அழைத்து நன்றாக தேய்த்து விட சொல்ல வேண்டும். அழகு என்பது முகத்தில் மட்டுமில்லை, முதுகிலும் தான்.

பாத பராமரிப்பு

பாத பராமரிப்பு

கால்விரல்களில் உள்ள நகங்களை வெட்டிவிட்டு, பின் அதனை வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்த, 10 நிமிடம் கால்களை அந்த நீரில் ஊற வைத்து, இறுதியில் படிகக்கல்லை வைத்து தேய்த்து, பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வண்டும்.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

பெண்கள் மட்டும் தான் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை, ஆண்களும் அவ்வப்போது ஸ்பா சென்று உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து கொள்வதினால், நன்கு புத்துணர்ச்சியுடனும் இருப்பதோடு, சருமமும் நன்கு மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smooth Skin For Men: 10 Tips To Follow | ஆண்களே! மென்மையான சருமம் வேண்டுமா? அதற்கு இதோ சில டிப்ஸ்...

To get smooth skin, men must take their skin care needs more seriously. All the grooming tips are effective only when they are practised regularly. Here are some simple grooming tips that can help men get smooth skin.
Story first published: Thursday, April 25, 2013, 15:33 [IST]
Desktop Bottom Promotion