For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோலி வரப்போகுது... சருமத்தையும் உடலையும் தவறாம பராமரிங்க...

By Maha
|

ஹோலி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பண்டிகையின் போது பல வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடுவோம். அவ்வாறு கொண்டாடும் போது அந்த பொடிகளில் உள்ள நிறங்கள் சருமம் மற்றும் உடலில் தங்கி, சில பிரச்சனைகளை உண்டாக்கும். அதனை நினைக்கும் போது, சிலருக்கு நிம்மதியான கொண்டாட்டம் இருக்காது. கொண்டாட்டம் இருந்தாலும், ஒரு பக்கம் பயமும் சூழ்ந்து கொண்டு, சந்தோஷம் இல்லாமல் போகும்.

அத்தகைய வருத்தம் உள்ளவர்களுக்கு, ஹோலியை எந்த ஒரு பயமுமின்றி, சந்தோஷமாக கொண்டாடுவதற்கு, சருமத்திற்கும், கூந்தலுக்கும் சில பராமரிப்பு டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். பொதுவாக ஹோலி அன்று சருமத்தில் வண்ணப் பொடியானது சருமத்தில் படிந்து எளிதில் போவதற்கு, கொண்டாட்டத்திற்கு முன்பே, சருமதிற்கு எண்ணெய் தடவிக் கொள்வோம். அதிலும், ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே, சருமத்திற்கு ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, கூந்தலுக்கும் எண்ணெய் தடவுவது தான் சரியான பராமரிப்பு. மேலும் இது கோடைகாலம் என்பதால், அதற்கும் ஏற்றவாறு பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது அத்தகைய பராமரிப்புக்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தலுக்கு விளக்கெண்ணெய் மசாஜ்

கூந்தலுக்கு விளக்கெண்ணெய் மசாஜ்

விளக்கெண்ணெயை கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும். அதிலும் இதனை ஹோலி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே, இரவில் படுக்கும் போது மசாஜ் செய்தால், கூந்தல் நன்கு வலிமையடைவதோடு, ஹோலியின் போது வீசி விளையாடப்படும் வண்ணப் பொடிகளால், கூந்தலில் நிறம் தங்காமல் இருக்கும்.

டோனர்

டோனர்

ஹோலி விளையாட்டுக்களால், சருமத் துளைகளில் மாசுக்கள் தங்கி பருக்களை உண்டாக்க நேரிடும் எனவே இத்தகைய பிரச்சனையை தவிர்க்க, எண்ணெய் அல்லது க்ரீமை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்துளைகள் நன்கு ஈரப்பசையுடன் இருக்கும். பின்பு என்ன, ஹோலிக்கு பிறகு, முகத்தை கழுவினால் துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்றிவிடலாம்.

உடலுக்கு கடுகு எண்ணெய் மசாஜ்

உடலுக்கு கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெயில் இரண்டு நன்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று இந்த எண்ணெய் கெட்டியானது மற்றும் சருமத்தில் நிறங்களை தங்க விடாமல் தடுக்கும். மற்றொன்று இது சூரியக்கதிர்களிடமிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பு தரும்.

லிப் பாம்

லிப் பாம்

உடலிலேயே உதடு தான் மிகவும் மெல்லிய தோலை உடையது. இதனால் உதட்டில் எளிதில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே உதட்டிற்கு நன்கு அடர்த்தியாக லிப் பாம் போட்டுக் கொண்டால், உதட்டிற்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும்.

காதுகளுக்கு பாதாம் எண்ணெய்

காதுகளுக்கு பாதாம் எண்ணெய்

பொதுவாக காதுகளில் ஏதேனுடம் படிந்தால், அது அவ்வளவு எளிதில் போகாது. எனவே காதுகளில் நிறங்கள் தங்காமல் இருப்பதற்கு, காதுகளுக்குப் பின்புறம் வைட்டமின் ஈ நிறைந்து பாதாம் எண்ணெய் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்தால், காதுப் பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

கூந்தலை சீவுதல்

கூந்தலை சீவுதல்

கூந்தலில் உள்ள முடிச்சுக்கள் அனைத்தையும் நன்கு கவனமாக சீவி எடுத்து, மேலே கட்டிக்கொள்ளவோ அல்லது கொண்டையோ போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வண்ணப் பொடிகள் முடிச்சுள்ள பகுதிகளில் தங்கி, கூந்தலை வறட்சியாக்கி, பின் கூந்தலை கொத்தாக கைகளில் வரச் செய்யும்.

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ்

வண்ணப் பொடிகளை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் படிந்து, நகத்தின் நிறத்தை மாற்றிவிடும். எனவே நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டால், நகங்களில் நிறங்கள் படிவதைத் தடுக்கலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

மூக்கு துவாரங்களில் கடுகு எண்ணெயை தடவிக் கொண்டால், தூசிகள் மூக்கின் வழியாக சென்று, மூக்கடைப்பு அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே ஹோல விளையாடுவதற்கு முன், கடுகு எண்ணெயை தடவிக் கொண்டால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.

சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

ஹோலி விளையாடும் முன், சன் ஸ்கிரீன் லோசனை உடலில் தடவிக் கொண்டு சென்றால், கோடையினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin n Hair Care Tips Before Holi | ஹோலி வரப்போகுது... சருமத்தையும் உடலையும் தவறாம பராமரிங்க...

Holi is a festival that is known for its exuberant colours and maddening celebrations. However, your skin and hair are usually ignored during the Holi celebration. Every year, you are in a dilemma just before Holi. Here are some skin care and hair care tips that need to be followed before Holi.
Desktop Bottom Promotion