For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கை அட்டு கருப்பாக இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி வெள்ளையாக்குங்க...

By Maha
|

உடலிலேயே கைகள் தான் அதிக அளவில் சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றன. அப்படி அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால், கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால், நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி, முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால், கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது.

அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ, அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளியே செல்லும் போது சூரியக்கதிர்கள் கைகளில் படாதவாறு கைகளுக்கு பாதுகாப்பு கவசமான சன் ஸ்க்ரீன் லோசனை அணிந்து செல்ல வேண்டும்.

சரி, இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்கி, நல்ல வெள்ளையான கைகளைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே கொடுத்துள்ளோம். படித்து முயற்சி செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் கிளின்சிங் தன்மை இருப்பதால், இதன் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து, ஊற வைத்து கழுவி வந்தால், கைகளில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

பால்

பால்

பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் காட்டனை நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருந்தால், அந்த எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் வெள்ளையாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சிறிது எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறியவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் கைகளில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி, எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், கைகளுக்கு சன் ஸ்க்ரீன் லோசனை தவறாமல் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quick Hand Whitening: Home Tips

There are a number of hand whitening home tips by which you can even out the skin tone of your hands, reduce the dark spots and make your hands fairer. Here are a few hand whitening home tips.
Story first published: Thursday, November 21, 2013, 17:17 [IST]
Desktop Bottom Promotion