For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழுந்ததும் கண்கள் சிவப்பாகவும் வீங்கியும் உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறு பார்க்கும் போது முதலில் கண்களைத் தான் பார்ப்போம். ஆனால் இரவில் தாமதமாக தூங்கி இருந்தால், கண்கள் சோர்வுடனும், சிவப்பு நிறத்திலும் வீங்கி காணப்படும். இந்த கண்களுடன் அப்படியே அலுவலகத்திற்கோ அல்லது வெளியே சென்றாலோ நன்றாக இருக்காது.

ஆகவே அப்படி சிவப்பாகவும், வீக்கத்துடன் இருக்கும் கண்களை சாதாரணமானதாக்குவதற்கு, காலையில் 20 நிமிடம் ஒதுக்கினால் போதும், அதனைப் போக்கிவிடலாம். ஏனெனில் அத்தகைய வீக்கத்தை ஒருசிலப் பொருட்களைக் கொண்டு சரிசெய்து விடலாம். மேலும் இங்கு குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும், மிகவும் எளிதில் வீட்டில் கிடைக்கக்கூடியவை.

சரி, இப்போது அப்படி சிவப்பாகவும், வீங்கியும் இருக்கும் கண்களை குணப்படுத்துவதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ பேக்

டீ பேக்

டீ பேக்கை குளிர்ந்த நீரில் சிறிது ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைத்தால், டீ பேக்கில் உள்ள பொருட்கள், கண்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, கண்களை பொலிவாக வெளிப்படுத்தும்.

ஸ்பூன்

ஸ்பூன்

நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் சில்வர் ஸ்பூனை கண்களின் மேல் வைத்தால், வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் இந்த முறையை ஸ்பூன் குளிர்ச்சியை இழக்கும் வரை செய்ய வேண்டும். இதனால் நிச்சயம் கண்களில் உள்ள சிவப்பு நீங்கிவிடும்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

குளிர்ச்சியான மில்க் க்ரீமை கண்களைச் சுற்றி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் வைத்து, சிறிது நேரம் உட்கார்ந்து பின் குளிக்க செல்ல வேண்டும். இதனால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்து, கண்கள் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், வீக்கம் குறைந்துவிடும். மேலும் இந்த முறையின் மூலம் கண்களில் உள்ள சோர்வும் நீங்கிவிடும்.

இயற்கை எண்ணெய்கள்

இயற்கை எண்ணெய்கள்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், கண்களைச் சுற்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆகவே கண் வீக்கமும் தணியும்.

ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்கள்

இரவில் படுக்கும் போதே, ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுவதோடு, ரோஜா இதழ்களை வீக்கமுள்ள கண்களின் மேல் வைக்க வேண்டும்.

சாவி

சாவி

சிவப்பாகவும், வீக்கதுடனும் காணப்படும் கண்களை உடனே சரிசெய்ய வேண்டுமெனில், நன்கு குளிர்ச்சியாக இருக்கும் சாவியை கண்களின் மேல் வைத்தால், கண்கள் புத்துணர்ச்சியுடனும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Puffy Red Eyes Early In The Morning?

One of the most difficult things to get rid of early morning is those puffy red eyes. Boldsky has put together some of the beauty tips which you can follow in order to look bright and beautiful. The list which has been given below is easy and not time consuming. Take a look at these ways to get rid of early morning puffy and red eyes.
Story first published: Friday, September 20, 2013, 13:10 [IST]
Desktop Bottom Promotion