For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

By Maha
|

ஓசோன் மண்டலம் ஓட்டையாகி விட்டதால், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள், நேரடியாக சருமத்தில் படும் போது சருமமானது பெரும் பிரச்சனைக்கு ஆளாகிறது. குறிப்பாக வெயிலின் தாக்கம் சருமத்தில் அதிகம் படுவதால், சருமத்தின் நிறம் பழுப்பு நிறமாகவோ அல்லது கருமையாவோ மாறுகிறது. இதனால் ஒரு முறை வெயிலில் சென்று வந்தாலும், சருமம் பொலிவிழந்து அழகே கெட்டுப் போகிறது. சிலசமயங்களில் அந்த வெயிலின் தாக்கம் அதிகப்படியாக சருமத்தில் படும்போது, சருமப் புற்றுநோய் ஏற்படுகிறது.

எனவே சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு நோயும் இல்லாமல், அழகாக காணப்படுவதற்கு முறையான பராமரிப்பு அவசியமாகிறது. அதிலும் கோடைகாலம் நெருங்கிவிட்ட நிலையில், சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. எனவே அந்த பராமரிப்பிற்கு சில நேச்சுரல் எண்ணெய்கள் சிறந்ததாக உள்ளது. இந்த எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு பொலிவோடு, வறட்சியின்றி, நிறம் மாறாமல் இருக்கும்.

சரி, இப்போது எந்த எண்ணெய்களையெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கருமை நிற சருமத்தை இயற்கையாக போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறந்ததாக இருக்கும். அதிலும் காலையில் கடுகு எண்ணெயை வைத்து உடலில் மசாஜ் செய்து, சூரிய வெளிச்சத்தில் படுத்தால், சூரியனிடமிருந்து வரும் வைட்டமின் டி சத்தானது உடலில் எளிதில் ஊடுருவுவதோடு, எலும்புகள் வலுவடையும். அதனால் தான் குழந்தைகளுக்கு எலும்புகள் வலுவடைய, கடுகு எண்ணெயை வைத்து மசாஜ் செய்கின்றனர்.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்திப் பூ சூரியனுடன் ஒரு இணக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே தான் இதற்கு சூரியகாந்தி என்ற பெயர் வந்தது. இத்தகைய பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, சருமத்தின் நிறம் மாறாமலும், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்டாமலும் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்கிறது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சரும செல்களை புதுபிப்பதற்கு உதவும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. அதே சமயம், சூரியக்கதிரால் சருமத்தின் நிறம் பழுப்பாக மாறாமலும் தடுக்கும். அதற்கு ஆலிவ் ஆயிலில் சிறிது அயோடின் (உப்பு) சேர்த்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் லோசனும் கூட. அதிலும் இது அதிக சென்சிடிவ்வான சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும நிற மாற்றத்தை தடுக்காது, ஆனால் இதனை வெயிலில் செல்லும் முன் தடவிக் கொண்டு சென்றால், சரும நிற மாற்றத்தைத் தடுக்கலாம். மேலும் இது அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது.

கோதுமை எண்ணெய்

கோதுமை எண்ணெய்

இது மிகவும் ஆரோக்கியமான எண்ணெய். இதில் வைட்டமின் ஈ, டி மற்றும் ஏ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் மென்மையாவதோடு, சூரியக்கதிர்களால் சருமம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

அவகேடோ ஆயில்

அவகேடோ ஆயில்

நீண்ட நேரம் வெயிலில் சென்றால், சருமம் வறட்சியடைந்துவிடும். ஆகவே நீண்ட நேரம் சருமம் வறட்சியின்றி இருப்பதற்கு அவகேடோ எண்ணெயை தடவிக் கொண்டால், சருமம் நீண்ட நேரம் பொலிவோடு ஈரப்பசையுடன் இருப்பதோடு, வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் சரும நிற மாற்றத்தையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Tanning Oils For A Healthy Tan | வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...

To get an uniform tan, you can use tanning oils. These natural oils aid the process of sun tanning. The harsh sunlight can also cause a sun burn or damage your skin. Tanning oils protect the skin while you are enjoying a sun tan. These are some of the best natural oils that protect the skin and aid sun tanning.
Story first published: Wednesday, February 27, 2013, 14:44 [IST]
Desktop Bottom Promotion