For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!!

By Super
|

உடல் வலி அல்லது தசைப் பிடிப்பின் போது என்ன செய்வீர்கள்? சந்தையில் விற்கும் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி பயன்படுத்துவீர்கள், சரிதானே? ஏன் மருந்துக்காக கடைகளுக்கு ஓட வேண்டும்? இதில் உள்ள மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அந்த மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள். பக்க விளைவு இல்லாத மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால்!!!

வலியைத் தணிக்கும் பாம்மை, செலவில்லாமல் பல சத்துள்ள பொருட்களையும், பகட்டான பொருட்களையும் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம். பொதுவாக இவ்வாறு தயாரிக்கும் பாம்களை உதட்டுக்குத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அதனை உடம்பில் எந்த பகுதியில் நோய் ஏற்பட்டாலும் பயன்படுத்தலாம். இதனால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் கடின உழைப்பு மற்றும் வானிலையால், சருமமும் பாதிப்படையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

Homemade balms to soothe your skin

வலியைத் தணிக்கும் மருந்து:

வலியைத் தணிக்கும் மருந்துகளை தயாரிக்க சிறிது பயிற்சி தேவைப்படும். ஆனால் நன்கு பழகிய பின், திரும்ப திரும்ப இதனை தயாரிக்க தோன்றும். எந்த ஒரு தணிக்கும் மருந்தாகட்டும், அதற்கு மூல பொருளாக விளங்குவது ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய்கள் தான். அதற்கு அடுத்து தேவைப்படும் முக்கிய பொருள் மெழுகு. இது இந்த மருந்தை பாதுகாக்கவும் நம் சருமத்தில் தடவவும் உதவும்.

செயல்முறை:

எண்ணெய் மற்றும் மெழுகை ஒன்றாக கலந்து, கொதிகலனில் மெழுகு உருகும் வரை கொதிக்க விடவும். இந்த கலவை அதிகமாக கொதிக்காமல் பார்த்து இறக்க வேண்டும். பின் இவை சற்று குளிர்ந்த பின் நறுமண எண்ணெய், காய்ந்த பூக்கள் அல்லது நறுமண பொருட்களைச் சேர்க்கலாம். இந்த கலவை முழுவதுமாக குளிர்வதற்கு முன், அதனை ஜாடி அல்லது குப்பியில் அடையுங்கள். தணிக்கும் மருந்து வீட்டில் தயாரிக்க இது ஒரு அடிப்படை முறையாகும். ஆனால் நம் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

உடம்பு வலியை தணிக்கும் மருந்தையும், உதட்டுக்கு பயன்படுத்தப்படும் பாம்மையும் தயாரிப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:

கேலன்டுலா (calendula) மற்றும் எலுமிச்சை:

இந்த மருந்தில் பூசண எதிர்ப்பு திறன் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் உள்ளது. இது நோய்த்தொற்றை குணப்படுத்தவும், வலிக்கு சிறந்த நிவாரணியாகவும் விளங்கும். இதை தயாரிக்க அரை கப் தேன் மெழுகு, 2 கப் ஆலிவ் எண்ணெய், 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் ஷியா(shea) வெண்ணெய், ¾ கப் காய்ந்த எலுமிச்சை மற்றும் கேலன்டுலாவின் இலைகள், 2-3 துளிகள் டீ-ட்ரீஎண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் ஆகியவைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செயல்முறை:

தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து, காய்ந்த மூலிகை செடிகளை போட்டு, அதனை மூன்று மணி நேரத்திற்கு லேசான சூட்டில் கொதிக்க விடவும். பின் கொதித்த கலவையை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது கொதிகலனில், மெழுகு மற்றும் வெண்ணெயை ஒன்றாக சேர்த்து உருக்கவும். உருகியதும் எண்ணெய் உள்ள பாத்திரத்தில் உடனே ஊற்றவும். அதனை டீ-ட்ரீ எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து மெதுவாக கிளறி விடவும். லேசான சூட்டில் இருக்கும் இந்த கலவையை கண்ணாடி ஜாடி மற்றும் அலுமினிய பாத்திரங்களில் நிரப்பி வையுங்கள்.

ரோஸ் லிப்-பாம்:

இதனை உதட்டில் பயன்படுத்தினால் ஈரப்பசை கிடைக்கும். இது ரோஜா நறுமணத்தோடு காபி தூள் நிறம் கொண்ட சாயம். இதனை தயாரிக்க தேவையானவை: 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது இனிப்பான பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் காய்ந்த ரோஜா மொட்டுக்கள், 1 டீஸ்பூன் கொக்கோ வெண்ணெய் (cocoa butter), ¼ டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் 2-3 சொட்டு ரோஸ் அல்லது வெண்ணிலா எண்ணெய்.

செயல்முறை:

தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை காய்ந்த ரோஜா இதழ்களோடு ஒரு சின்ன வாணலியில் ஊற்றி லேசான சூட்டில் முப்பது நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதித்த கலவையை நன்றாக வடிகட்டி விடவும். இப்போது கொக்கோ வெண்ணெயை, இரட்டை கொதிகலன் முறையில் உருகும் வரை கொதிக்க விடவும். இதனை கொதிக்க வைத்த எண்ணெயுடன் கலந்து தேவையான மற்ற எண்ணெயையும் கலந்து, மெதுவாக கிளறி பின் ஜாடிகளில் மாற்றுங்கள்.

English summary

Homemade balms to soothe your skin

Balm, the most inexpensive and creative product, can be made at home by infusing various nourishing and luxurious ingredients. Generally used for lips or to sooth any part of the body which requires immediate healing, they also act as a defensive barrier to the skin jagged by hard work, climate or gardening.
Desktop Bottom Promotion