For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

By Maha
|

உடல் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் உடல் அழகாக இருக்காது. அதற்கான ஒருசில உடல் பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் எவ்வாறு முகத்திற்கு, கைகளுக்கு, கால்களுக்கு, கூந்தலுக்கு சரியான பராமரிப்புகளை பார்த்து பார்த்து செய்கிறோமோ, அதேப்போல் பாதங்களையும் சரியாக கவனிக்க வேண்டும்.

ஏனெனில் மற்ற இடங்களை விட, பாதங்களில் தான் அதிகமான அளவில் அழுக்குகள் நிறைந்திருக்கும். அத்தகைய அழுக்குகளை சரியாக நீக்காமல் இருப்பதால், முகம் மற்றும் கைகள் ஒரு நிறத்திலும், பாதங்கள் வேறொரு நிறத்திலும் இருக்கும். இதனால் சிலர் கால்களுக்கு ஷூக்களை அணிந்து கொள்வார்கள். அவ்வாறு ஷூக்களை எவ்வளவு நேரம் அணிந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். மிஞ்சிப் போனால் 6 மணிநேரம் அணிந்திருக்க முடியுமா? எனவே ஷூக்கள் அணிந்து கால்களை சரியாக பராமரிக்கிறோம் என்று நினைக்காமல், அவ்வப்போது, கால்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, பழுப்பு நிறத்தை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சி என்று சொன்னதும், அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒரு சில அன்றாடப் பொருட்களை வைத்தே பாதங்களை சூப்பராக பராமரித்து, பொலிவான, வெண்மையான பாதங்களை பெற முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பாதங்களையும் சரியாக பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

இது கருமையான சருமத்தை வெள்ளையாக்க செய்யப்படும் ஒரு இயற்கையான ப்ளீச். அதிலும் இந்த ப்ளீச்சை உடலில் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களான முழங்கை, தோள்பட்டை, முகம் அல்லது பாதங்கள் போன்றவற்றில் செய்யலாம். அதற்கு எலுமிச்சை சாற்றை வைத்து, சிறிது நேரம் கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொலிவு பெறும்.

கடலை மாவு

கடலை மாவு

அக்காலத்தில் பெண்கள் நன்கு பொலிவோடு இருப்பதற்கு கடலை மாவு தான் காரணமாக இருந்தது. அத்தகைய கடலை மாவுடன், மஞ்சள் தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

பாதங்கள் வறட்சியுடன், பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். இதற்கு காரணம் பாதங்களில் எண்ணெய் சுரப்பி இல்லாததே ஆகும். எனவே அவ்வப்போது கால்களுக்கு, எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கால்கள் எண்ணெய் பசையுடன் இருப்பதோடு, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி கால்கள் பொலிவு பெறும். இந்த எண்ணெய் மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் சிறந்ததாக இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். ஏனெனில் எண்ணற்ற நன்மைகளை அது உள்ளடக்கியுள்ளது. அத்தகைய கற்றாழையின் ஜெல்லை பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

கால்களின் நிறம் மட்டும் பழுப்பு நிறத்தில் இருந்தால், தேங்காய் தண்ணீரை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜை 10-15 நிமிடம் தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால், பாதங்களில் உள்ள பழுப்பு நிறம் போய், பாதங்கள் அழகாக இருக்கும்.

பால்

பால்

தினமும் காய்ச்சாத பாலை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளித்தால், பாதங்களில் இருக்கும் கருமைநிறம் போய்விடும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

பாத பராமரிப்பான பெடிக்யூர் செய்யும் போது சிறிது வெள்ளை வினிகரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டில் செய்யும் பெடிக்யூரில் சூடான நீர், எலுமிச்சை சாறு, கிளிசரின், உப்பு மற்றும் வெள்ளை வினிகரை பயன்படுத்தி செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள கருமை நீங்கி, பாதங்களும் மென்மையாகும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாற்றையோ அல்லது அதன் ஒரு துண்டையோ, பாதங்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தினமும் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெள்ளரிக்காயை பாதங்களில் தேய்த்தால், பாதங்கள் அழகாய் புத்துணர்ச்சியோடு மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Whiten Dark Feet | பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Feet is one of the most highly exposed body part. That is why, your feet always looks tanned, dark and unclean. So, here are few home remedies to whiten the dark feet.
Desktop Bottom Promotion