For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

க்யூட்டான சிரிப்பு வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

அனைவருக்குமே அழகான முத்துப் போன்ற பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ஒரு நாளைக்கு பலமுறை பற்களை துலக்குவார்கள். சிலர் வெள்ளையான பற்களைப் பெறுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பற்களை பராமரிப்பார்கள். அவ்வாறு பராமரிப்பதால் மட்டும் பற்கள் நன்கு வெள்ளையாகிவிடாது.

உண்மையில் பற்களின் நிறம் வெள்ளை அல்ல. மஞ்சள் கலந்த வெள்ளை தான் பற்களின் உண்மையான நிறம். அதற்காக சரியாக பராமரிக்காவிட்டால், பற்கள் அடர் மஞ்சள் நிறத்தை அடைந்துவிடும். எனவே பற்களை ஆரோக்கியமாகவும், வலுவுடனும் வைத்துக் கொள்ளும் சில இயற்கை வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பற்களை முத்துப் போன்று வேண்டுமெனில், ஒரே முறையில் செய்வதால் மட்டும் வந்துவிடாது. தொடர்ச்சியாக அவற்றை பின்பற்ற வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் மற்றும் சொத்தைப் பற்கள் நீங்கி, வாய் துர்நாற்றம் இல்லாமல், அழகான புன்னகையைப் பெறலாம்.

இப்போது அழகான புன்னகைக்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைக் கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் பற்கள் வெள்ளையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயை கழுவவும்

வாயை கழுவவும்

எப்போது எதனை சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு வாயை கழுவ வேண்டும். இல்லாவிட்டால், பற்களைச் சுற்றி மஞ்சள் நிற கறையானது சுற்றிக் கொண்டு, சிரிக்கும் போது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே சாப்பிட்டப் பின் வாயில் நீரை நிரப்பி, நன்கு கொப்பளிக்க வேண்டும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு

கடுகு எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் பளிச்சென்று மின்னும்.

பற்களை துலக்கவும்

பற்களை துலக்கவும்

தினமும் இரண்டு முறை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. பற்களை சரியாக துலக்க வேண்டும். அதிலும் மேலே, கீழே மற்றும் வட்டமாக நன்கு சுழற்றி துலக்க வேண்டும்.

புகைப்பிடித்தலை நிறுத்தவும்

புகைப்பிடித்தலை நிறுத்தவும்

புகைப்பிடிப்பதால், பற்கள் மஞ்சளாக மட்டுமின்றி கருப்பாகவும், ஈறுகளில் கடுமையான வலியையும் உண்டாக்கிவிடும். எனவே நல்ல ஆரோக்கியமான பற்கள் மற்றும் அழகான சிரிப்பு வேண்டுமெனில், புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

டென்டல் ப்ளாஸ்

டென்டல் ப்ளாஸ்

டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இதனால் மூலைமுடுக்குகளில் தங்கியிருக்கும் அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடலாம். இந்த முறையால் சிரிக்கும் போது வெளிவரும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

பாலிஷ்

பாலிஷ்

சில நேரங்களில், பற்களில் அதிகப்படியான அளவில் மஞ்சள் கறைகளானது இருக்கும். அப்போது பிரஷ் கொண்டு பற்களை துலக்கினாலும், நீங்காமல் இருக்கும். ஆகவே அத்தகைய கறைகளை, முதலில் டூத் பிக் கொண்டு தேய்த்து, பின் எனாமல் கொண்டு பாலிஷ் செய்தால் நீக்கிவிடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருப்பதோடு, ப்ளீச்சிங் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே பற்கள் நன்கு அழகாக மின்னுவதற்கு, எலுமிச்சை துண்டைக் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும்.

காப்ஃபைன் பொருட்கள்

காப்ஃபைன் பொருட்கள்

டீ மற்றும் காபியில், பற்களின் அழகைக் கெடுக்கும் வகையில் காப்ஃபைன் என்னும் பொருளானது இருக்கிறது. இவற்றை தொடர்ச்சியாக குடித்தால், பற்களின் அழகு பாழாகும். எனவே அளவாக குடிப்பதோடு, குடித்தப் பின்னர், வாயை நன்கு நீரால் அலச வேண்டும்.

கிராம்பு

கிராம்பு

பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமெனில், கிராம்பை அவ்வப்போது வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடாவில் சிறிது வினிகர் சேர்த்து கலந்து, பற்களை துலக்கினால், பேக்கிங் சோடா சொத்தைகளையும், வினிகரில் உள்ள சிட்ரஸ் மஞ்சள் கறைகளையும் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Glowing Teeth Tips For The Perfect Smile

Glowing teeth tips basically work only when you use them regularly. The natural colour of your teeth is not white, but pale yellow. However, if you do not follow proper dental hygiene, your teeth will become all the more yellow. Here are some of the best glowing teeth tips that you can use to get a perfect smile.
Desktop Bottom Promotion