For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்ப பேக்கிங் சோடாவை யூஸ் பண்ணுங்க...

By Super
|

காலை கடன்களில் மிகவும் முக்கியமானது பல் துலக்குவது. பற்களை சுத்தமாக வைத்து கொள்ளவில்லையென்றால், பல நோய்கள் நம்மை தாக்கக்கூடும். ஆகையால் எந்த வேளையை மறந்தாலும், பல் துலக்குவதை மறக்கக் கூடாது. பற்களை சுத்தமாக துலக்கினால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

அதிலும் எங்காவது வெளி இடங்களுக்கு செல்லும் போது, டூத் பேஸ்ட்டை எடுத்து செல்ல மறந்துவிட்டால், அப்போது கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் இருக்கும் இடத்திலிருந்தே, அதை எளிமையாக தயாரித்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதால் கெமிக்கல் நிறைந்த டூத் பேஸ்ட்டை தவிர்ப்பதுடன், வெள்ளையான பற்களையும் பெற முடியும். குறிப்பாக அந்த தருணங்களில் பேக்கிங் சோடா கைக் கொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம். ஆம், பேக்கிங் சோடா கொண்டும் எளிய முறையில் பேஸ்ட் செய்து, பற்களை துலக்கலாம். சரி, இப்போது அந்த பேக்கிங் சோடா கொண்டு எப்படி டூத் பேஸ்ட் செய்வதென்று பார்ப்போமா!!!

Can we use Baking Soda as Toothpaste

டூத் பேஸ்ட் தயாரிக்கும் முறை:

* பேக்கிங் சோடாவை ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் சேர்த்து, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரிக்க முடியும். அதற்கு கால் டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு எடுத்து, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலந்து, ஒரு டப்பாவில் போட்டு விடவும்.

* பின் அதனுடன் ஒரு துளி பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்தால், புத்துணர்வு கொடுக்கும் நறுமணத்தை பெறலாம்.

* பிறகு சிறிது கிளசரின் சேர்க்கவும். இயல்பாக இது பிசுபிசுப்பு தன்மை கொண்டிருப்பதால், இதை நன்கு கலக்க வேண்டும். மேலும் வேண்டுமெனில் அத்துடன் 5 துளி ஸ்ட்ராபெர்ரி எண்ணெயைக் கலந்து கொள்ளலாம்.

* பின்பு அதனை ஒரு டப்பாவில் போட்டு, குளிச்சியான அல்லது சாதாரண வெப்ப நிலையில் வைத்து பராமரித்து வந்தால், ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் இயற்கைக்கு மாறான டூத் பேஸ்ட்களை விட, இந்த டூத் பேஸ்ட் மிகவும் சிறந்தது.

* மேலும் இதனை டூத் பிரஷ்ஷில் தொட்டு, பற்களை துலக்கி, வாயை நீரில் நன்கு அலசினால், பற்களின் இடையில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கிவிடுவதோடு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை கொன்று ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

* அதுமட்டுமல்லாமல் இதனுள் இருக்கும் சோடியம்-பை-கார்பனேட், பற்களின் அழுக்குகளை எளிதில் போக்கக் கூடியது. ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் காரணிகள் அதிகம் நிறைந்துள்ளதால், கிருமிகளை எளிதில் கொன்று விடுகின்றது.

* அதிலும் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து கலந்தால், மௌத் வாஷாகவும் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த முறையை மேற்கொள்ளும் போது, விழுங்கி விடாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த கலவையை குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.

English summary

Can we use Baking Soda as Toothpaste

Imagine you are out on a vacation to your favorite holiday destination. In a rush, you forget to pack your toothpaste and brush. What would you do temporarily in order to keep the whitening of your teeth intact? Well, you would look for toothpaste alternatives. Awareness of the fact that common baking soda can be used as toothpaste proves handy in such a situation.
Desktop Bottom Promotion