For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பயன்படும் சில வீட்டு பொருட்கள்!!!

By Super
|

முகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஒருவரின் அழகை, முகத்தை வைத்து தான் முதலில் எடை போடுகிறோம். ஆகவே அதன் வசீகரத்தை பாதுகாக்க பல முயற்சிகளை எடுப்போம். அதிலும் குறிப்பாக பெண்கள் தான். எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், பல சரும நோய்கள் நம்மை தாக்கவே செய்யும். அதனை வராமல் தடுக்க பல வழிகள் இருந்தாலும், வந்த பின் உரிய சிகிச்சை அளிக்கவும் பல வழிகள் உள்ளன. அப்படி நாம் காணும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான், முகத்திலும் தேகத்திலும் வரும் கரும்புள்ளிகள். பழுப்பு நிற கரும்புள்ளிகள் மற்றும் மெலஸ்மா எனப்படும் மங்கு போன்ற கரும்புள்ளிகள் முகத்தில், கைகளில் மற்றும் தோள்பட்டைகளில் ஏற்படுவதுண்டு.

பொதுவாக முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டால், தங்கள் அழகை வெகுவாக பாதிக்கும் என்று பெண்களுக்கு எரிச்சல் ஏற்படுவதுண்டு. முகத்தில் ஏற்படும் இவ்வகை கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பல நாட்களானாலும், இது கடினமானது அல்ல. சருமம் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகளை இயற்கையாக நீக்குவதற்கு, பல வீட்டு சிகிச்சைகளும், சரும பாதுகாப்பு டிப்ஸ்களும் சஉள்ளது.

ஏஜ் ஸ்பாட்ஸ், லிவர் ஸ்பாட்ஸ், சூரியக்கதிர்களால் ஏற்படும் கரும்புள்ளிகள், மெலஸ்மா, கறைபிடிப்பு மற்றும் கருமையான சருமம் போன்றவற்றை போக்குவதற்கு வீட்டு சிகிச்சை அளிக்க வெங்காயம், வினீகர் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை பயன்படுகிறது. அதுமட்டுமின்றி வேறு சில பொருட்கள் கொண்டும், இத்தகைய பழுப்பு நிற கரும்புள்ளிகளைப் போக்கலாம். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், மெலஸ்மா மற்றும் மங்கு புள்ளிகளுக்கு அளிக்கப்படும் வீட்டு சிகிச்சைகளில் எலுமிச்சை சாறு சிறந்ததாக விளங்குகிறது. ஆகவே பஞ்சு உருண்டையை எலுமிச்சை சாற்றில் நனைத்து, கரும்புள்ளிகள் ஏற்பட்ட இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால் அந்த கரும்புள்ளிகள் தேய்ந்து நாளடைவில் மறைந்துவிடும்.

தக்காளி சாறு

தக்காளி சாறு

தக்காளி சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் தடவி ஊற வைத்து கழுவினால், முகத்தில் காணப்படும் கறைகள், மங்கு புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவைகள் பெரிதளவில் குறையும். கரும்புள்ளிகளுக்கு இது சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.

வெங்காய சாறு

வெங்காய சாறு

1 டீஸ்பூன் வெங்காய சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேனை கலந்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் 15 நிமிடங்கள் தடவினால், ஏஜ் ஸ்பாட்ஸை வேகமாக நீக்கலாம்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்க பால், க்ரீம் மற்றும் தேனை கலந்து ஒரு கலவையை தயார் செய்து, கரும்புள்ளி உள்ள இடங்களான முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளை நாளடைவில் போக்கலாம்.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி சாற்றை முகத்தில் தடவுவதால் கூட கரும்புள்ளிகளை நீக்கலாம். இயற்கையான முறையில் கரும்புள்ளிகளை நீக்க, தினமும் முகத்தில் தடவி ஒரு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாற்றில், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வேர்க்கோசு ஜூஸை சரிசமமாக கலந்து, முகம் மற்றும் கழுத்தில் காணப்படும் கரும்புள்ளிகளின் மேல் தடவி 30 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் மங்கு புள்ளிகளை போக்க உள்ள சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

கடுகு

கடுகு

கரும்புள்ளிகளை போக்க மற்றறொரு மருந்தாக விளங்குகிறது கடுகு பேஸ்ட். சிறிது கடுகு விதையை அரைத்து, அதனுடன் பாலை சேர்த்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளில் தடவி, 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமையான திட்டுகளை நீக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்ரிக்காட்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்ரிக்காட்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்ரிக்காட்டை ஒன்றாக சேர்த்து மசித்து, அந்த கலவையை முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் சிவந்த திட்டுகள் இருக்கும் இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், ஏஜ் ஸ்பாட்ஸ், லிவர் ஸ்பாட்ஸ் மற்றும் மங்கு புள்ளிகளை நீக்க சிறந்த வழியாக இருக்கும்.

வெள்ளை மற்றும் சிவப்பு சந்தனம்

வெள்ளை மற்றும் சிவப்பு சந்தனம்

வீட்டிலேயே செய்யப்படும் ஸ்க்ரப் கூட முகம், கழுத்து மற்றும் கைகளில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. சிகப்பு மற்றும் வெள்ளை சந்தனப் பொடியை ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதனுடன் அரை கப் ஓட்ஸ், சிறிதளவு பால் மற்றும் பன்னீரையும் கலந்து கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் வாரம் மூன்று முறையாவது செய்து வர வேண்டும். இதனால் முகம், கழுத்து மற்றும் கைகளில் உள்ள கரும்புள்ளிகள் மெதுவாக நீக்கும்.

மோர்

மோர்

முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் சரும நிற மாறுதல்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மோர் மற்றும் தக்காளி ஜூஸ் கலவை. அதற்கு 4 டீஸ்பூன் மோருடன், 2 டீஸ்பூன் தக்காளி ஜூஸை கலந்து, சருமத்தில் தடவினால் கரும்புள்ளிகள் மற்றும் ஏஜ் ஸ்பாட்ஸ் மெதுவாக மறையும்.

பூண்டு சாறு

பூண்டு சாறு

1 டீஸ்பூன் பூண்டு சாற்றில், 1 டீஸ்பூன் வெங்காய சாறு சேர்த்து கலந்து, அதனை கரும்புள்ளிகளின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கச் செய்து, இதர இடங்களில் காணப்படும் நிற மாறுதல்களை குறைய வைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

பச்சையான உருளைகிழங்கில் எடுத்த சாறு, இயற்கை முறையில் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்க உதவும். எனவே உருளைகிழங்கு சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, 15-20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் கரும்புள்ளிகள் குறையும்.

கற்றாழை

கற்றாழை

கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பதால் சோர்வுடன் இருக்கிறீர்களா? அப்படியானால் கற்றாழை உங்களுக்கு துணை புரியும். கற்றாழை ஜெல்லை, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தடவி வந்தால், பாதிப்படைந்த இடத்தில் முன்னேற்றம் தெரியும் வரை, இந்த சிகிச்சையை தொடர வேண்டும். இந்த இயற்கை வைத்தியம் இதமானதாக விளங்கும். கரும்புள்ளிகளை வேகமாகவும் நீக்கும்.

சந்தனக்கட்டை

சந்தனக்கட்டை

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், லிவர் ஸ்பாட்ஸ் மற்றும் கறைகளை அகற்ற, சந்தனக்கட்டையை தேய்த்து உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க சில வைட்டமின் ஈ நிறைந்துள்ள எண்ணெயான ஆலில் ஆயிலை முகத்தில் தடவலாம். அதிலும் பாதிக்கப்பட்ட சருமங்களில் வைட்டமின் ஈ எண்ணெய்களை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும். பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள், ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் கரும்புள்ளிகளுக்கு, இதுவும் கூட சிறந்த இயற்கை வைத்தியமே.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

கரும்புள்ளிகளை நீக்க உதவும் சிறந்த வீட்டு சிகிச்சை முறைகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் விளங்குவதால், ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கவும். அதற்கு 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 டீஸ்பூன் தேனை ஒரு கப் தண்ணீரில் கலந்து குடித்தால் கரும்புள்ளிகள் குறையும்.

எலுமிச்சை சாறு, கற்றாழை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

எலுமிச்சை சாறு, கற்றாழை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, கால் கப் தயிருடன் கலந்து, முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளின் மீது தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறை கரும்புள்ளிகளை மங்கச் செய்யும்.

தண்ணீர்

தண்ணீர்

கரும்புள்ளிகள், மெலஸ்மா மற்றும் மங்கு புள்ளிகளுக்கு சிறந்த இயற்கை நிவாரணியாக விளங்குகிறது தண்ணீர். தினமும் 6-8 டம்ளர் தண்ணீர் குடிப்பதனால், உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி, சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சருமத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மங்கி, ஏஜ் ஸ்பாட்ஸ் மெதுவாக குறையும்.

சன் ஸ்கிரீன் லோசன்

சன் ஸ்கிரீன் லோசன்

சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்களினால் ஏற்படுவது தான் கரும்புள்ளிகள். அதனால் சருமத்தை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவசியமான ஒன்று. வெளியில் செல்லும் போது, சருமத்தில் சன் ஸ்கிரீன் லோசன் தடவி கொண்டால், புறஊதா கதிர்களை அது தடுக்கும். இது ஒரு சிறந்த மெலஸ்மா சிகிச்சையாகும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய இயற்கை சிகிச்சைகள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சீரற்ற நிறம் மற்றும் திசு அமைப்பு போன்ற சரும பிரச்சனைகளையும் நீக்கும். ஒருவேளை எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை என்றால், ஒரு நல்ல சரும மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் அதற்கான உரிய சிகிச்சையை அளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies to Get Rid of Brown Spots on Face

Dark spots such as sun spots and melasma appear on your face, hands and shoulders. Here are some amazing homemade remedies and skin care tips that will clear your brown spots on skin and dark patches on face naturally. Onion, vinegar, and lemon juice are best home remedies for removing age spots, liver spots, sunspots, melasma, pigmentation, and dark discoloration of skin.
Desktop Bottom Promotion