For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகை பராமரிக்க பெட்ரோலியம் ஜெல்லியை யூஸ் பண்ணுங்க...

By Maha
|

அழகைப் பராமரிப்பதற்கு பயன்படும் பொருட்களில் ஒன்று தான் பெட்ரோலியம் ஜெல்லி. அனைவருக்குமே பெட்ரோலியம் ஜெல்லியை வறட்சியான மற்றும் வெடிப்புள்ள உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் உள்ள பிரச்சனை நீங்குவதோடு உதடுகளும் மென்மையாகும். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் மேக்-கப்பை நீக்குவதற்கும், காஜலை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்க்ள.

அதுமட்டுமல்லாமல், பெட்ரோலியம் ஜெல்லி வேறு பல அழகு பராமரிப்பிலும் பயன்படுகிறது. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால், அதனைப் பயன்படுத்தி அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி வெடிப்பு

முடி வெடிப்பு

முடியில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெடிப்பைத் தடுப்பதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை முடியின் நுனியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்த, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முடி வெடிப்பானது தடைபடும்.

அழகான உதடு

அழகான உதடு

நிறைய பெண்கள் லிப்ஸ்டிக் போட்டப் பின்னர், உதடுகள் மினுமினுக்க பல்வேறு லிப் கிளாஸ்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இத்தகைய லிப் கிளாஸ் பயன்படுத்தாமலேயே உதடுகள் மினுமினுக்க வேண்டுமெனில், லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி பின் லிப்ஸ்டிக் போட வேண்டும். மேலும் இந்த முறையால், உதடு வறட்சியை தடுப்பதோடு, பற்களில் லிப்ஸ்டிக் படுவதையும் தவிர்க்கலாம்.

மென்மையான நகங்கள்

மென்மையான நகங்கள்

சிலருக்கு நகங்கள் பொலிவிழந்து, எளிதில் உடையவும் மற்றும் உரியவும் ஆரம்பிக்கும். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடே ஆகும். இருப்பினும் இத்தகைய குறைபாட்டிற்கு நல்ல கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, நகங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை தடவி வந்தால், நகங்கள் பொலிவோடு அழகாய் மின்னும்.

காஜல்

காஜல்

கண்கள் பளிச்சென்று தெரிவதற்கு போடும் காஜலை நீக்குவது சற்று கடினம். அத்தகைய காஜலை எளிதில் போக்குவதற்கு பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு துடைத்தால், எளிதில் போக்கலாம்.

குதிகால் வெடிப்பு

குதிகால் வெடிப்பு

பாதங்கள் எப்போதுமே வறட்சியுடன் இருக்கும். எனவே அவற்றிற்கு தினமும் மாய்ஸ்சுரைசர் தடவினால் தான், பாதங்கள் மென்மையுடன், சுத்தமாக இருக்கும். அதிலும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி, படுக்க வேண்டும்.

ஸ்கரப்

ஸ்கரப்

பெட்ரோலியம் ஜெல்லியை சர்க்கரையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக பொலிவோடு இருக்கும்.

மேக்-கப் ரிமூவர்

மேக்-கப் ரிமூவர்

முகத்திற்கு அழகாக மேக்-கப் போட்டால் மட்டும் போதாது, அதனை சுத்தமாகவும், எளிதாகவும் நீக்க தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பெட்ரோலியம் ஜெல்லியை காட்டன் கொண்டு துடைத்தால், எளிதில் மேக்-கப்பானது நீங்கிவிடும்.

நாள் முழுவதும் மணத்துடன் இருக்க...

நாள் முழுவதும் மணத்துடன் இருக்க...

தினமும் உடலுக்கு பாடி ஸ்ப்ரே அடிக்கும் முன், அக்குளில் முதலில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி பின் அடித்தால், நறுமணமானது நீண்ட நேரம் இருக்கும்.

அழகான முழங்கை/முழங்கால்

அழகான முழங்கை/முழங்கால்

முழங்கை மற்றும் முழங்கால்கள் கருப்பாக வறட்சியுடன் இருந்தால், அதனை வெள்ளையாக்குவதற்கும், வறட்சியின்றியும் வைப்பதற்கு, தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும்.

கண் இமைகள்

கண் இமைகள்

கண் இமைகள் சிலருக்கு குறைவாக இருக்கும். அத்தகையவர்கள் கண் இமைகள் வளர்வதற்கு, தினமும் இரவில் படுக்கும் முன், பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் தடவி படுக்க வேண்டும். இதனால் நாளடைவில் கண் இமைகள் நன்கு அடர்த்தியாகவும், அழகாகவும் வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Uses Of Petroleum Jelly

If you have leftover petroleum jelly, you can make use of this beauty product to the fullest. Here is how you can use petroleum jelly in different ways.
Story first published: Tuesday, June 4, 2013, 13:16 [IST]
Desktop Bottom Promotion