For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான பட்டுப் போன்ற கால்களைப் பெற ஆசையா? இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், முகம் மற்றும் கைகளுக்கு அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்துவார்கள். ஆனால் அழகு என்பது வெறும் முகம் மற்றும் கைகளில் மட்டும் இல்லை, கால்களிலும் தான் உள்ளது. ஆம், சிலருக்கு கால்கள் மிகவும் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அத்தகையவர்கள் எந்த ஒரு ஆடையையும் கூச்சமின்றி அணியலாம். ஆனால் சிலருக்கு கால்களில் அதிகப்படியான முடி இருக்கும். அத்தகையவர்கள் சுடிதார், ஜீன்ஜ், புடவை ஆகியவற்றை மட்டும் தான் அணிய முடியும். மேலும் எவ்வளவு தான் பிடித்தமான பாவாடை இருந்தாலும், அதனை பார்த்து மட்டும் தான் ரசிக்க முடியுமே தவிர அணிய முடியாது. ஆகவே பலர் கால்களில் உள்ள முடியை நீக்குவதற்கு வாக்சிங் செய்வார்கள்.

இவ்வாறு கால்களுக்கு வெறும் வாக்சிங் செய்தால் மட்டும் கால்கள் மென்மையாகிவிடாது. அதற்கு வாக்சிங் செய்த பின்னர் ஒருசில செயல்களை பின்பற்ற வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு செல்லுங்கள் என்று சொல்லவில்லை. வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு கால்களை பராமரித்து வந்தால், நல்ல அழகான, பட்டுப் போன்ற கால்களைப் பெறலாம்.

சரி, இப்போது மென்மையான கால்களைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மசாஜ் செய்யவும்

மசாஜ் செய்யவும்

தினமும் குளிக்கும் முன் அல்லது இரவில் படுக்கும் முன், நறுமண எண்ணெய்களைக் கொண்டு கால்களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக மசாஜ் செய்யும் போது, கீழ் நோக்கியவாறு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, கால்கள் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

கால்களின் அழகை அதிகரிக்க வேண்டுமெனில், குளித்த பின்னர் ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி, அதில் ரோஜா இதழ்கள் அல்லது ரோஜ் வாட்டரை கலந்து, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இதனால் கால்கள் நல்ல மணத்துடன் இருப்பதோடு, கால்களும் பொலிவாக காணப்படும்.

பால்

பால்

கால்களின் பொலிவை அதிகரிக்க, குளிக்கும் 1/2 மணிநேரத்திற்கு முன் பாலைக் கொண்டு நன்க மசாஜ் செய்து, பின் குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

கால்களை அழகாக்குவதற்கு, உருளைக்கிழங்கு துண்டைக் கொண்டு கால்களை தேய்த்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் பளிச்சென்று காணப்படும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, அதனை கால்களில் தடவி மேல் நோக்கியவாறு தேய்த்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், கால்களின் பொலிவு அதிகரிக்கும். இந்த செயலை வாக்சிங் செய்த பின்னர் செய்ய வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் இது சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறியவற்றையெல்லாம் வாக்சிங் செய்த பின்னர் தினமும் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பொலிவான பட்டுப் போன்ற கால்களைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty Tips For Glowing Legs

To make your legs glow and smooth to touch after you have finished waxing, here are some of the best beauty secrets you should try out. Take a look at some of the ways in which you can get your toned legs to glow.
Desktop Bottom Promotion