For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த இடங்களில் எல்லாம் டாட்டூ போடலாம்?

By Maha
|

தற்போது ஃபேஷன் என்ற பெயரில் நிறைய உடைகள், செயல்கள் வந்துள்ளன. குறிப்பாக டாட்டூ என்பது சற்று பழைமையான ஒரு செயல் என்றாலும், தற்போது அதை சற்று நவீன உலகத்திற்கு ஏற்ப, அந்த பச்சை குத்திக் கொள்ளுதலிலும் ஃபேஷன் வந்துவிட்டது. முக்கியமாக இந்த டாட்டூ ஃபேஷன் ஆனதற்கு காரணம், உடைகள் என்று கூறலாம்.

எப்படியெனில், தற்போது உடைகளின் அளவு குறைவாக இருப்பதால், டாட்டூக்களை பல இடங்களில் வரைந்து கொள்கின்றனர். இந்த டாட்டூ போடும் முன் 2 விஷயங்களை நினைவில் கொண்டு பின்னர் போட் வேண்டும். அதில் ஒன்று, எந்த டிசைன் வரைந்தால் நமக்கு சரியாக இருக்கும் என்பது, மற்றொன்று எந்த இடத்தில் வரைய வேண்டும் என்பன.

பொதுவாக இந்த மாதிரியான டாட்டூக்களை திரை உலகினர் பலர், பல விழாக்களுக்கு போட்டுக் கொண்டு வருவார்கள். அதைப் பார்த்து, நாமும் போட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுவோம். ஆனால் டாட்டூ போடுவது என்பது அவ்வளவு ஈஸியானது அல்ல. அதைப் போடும் முன் நன்கு யோசிக்க வேண்டும். சரி, இப்போது அந்த டாட்டூக்களை எந்த இடங்களில் எல்லாம் போடலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்திற்கு பின்னால்

கழுத்திற்கு பின்னால்

சேலை கட்டும் போது ஜாக்கெட்டுகளின் கழுத்து, மிகவும் இறக்கமாக இருந்து, கொண்டையோ அல்லது குதிரை வாலோ போடும் போது, இந்த மாதிரி கழுத்திற்கு பின்னால், டாட்டூ போட்டுக் கொள்ளலாம்.

தோள்பட்டை

தோள்பட்டை

மந்திரா பேடி முதுகுப் புறத்தில் குறைவான ஆடை இருக்கும் படியான உடையில், தோள்பட்டையின் பின்புறம் டாட்டூக்களை போட்டு, மிகவும் அழகாக 'ஓம்' போன்ற ஒரு டாட்டூ வரைந்திருப்பது, அந்த உடைக்கும், அவருக்கும் மிகுந்த அழகைத் தருகிறது.

முதுகின் கீழ்ப்பகுதி

முதுகின் கீழ்ப்பகுதி

இடுப்பு தெரியும் படியான உடை அணிவதாக இருந்தால், அப்போது முதுகின் கீழ்ப்பகுதியில் டாட்டூக்களை வரைந்து கொள்ளலாம்.

கையின் மேல் பகுதி

கையின் மேல் பகுதி

டாட்டூ என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரு இடம் என்றால் அது கையின் மேல் பகுதி தான். அதிலும் ஆண்கள் குறிப்பாக அந்த இடத்தில் டிராகன் டிசைனை வரைந்து கொள்வர். இதனால் அவர்கள் கையில்லாத உடை அணியும் போது, அழகாக இருப்பார்கள்.

மணிக்கட்டிற்கு மேல்

மணிக்கட்டிற்கு மேல்

இந்த இடத்தில் பழங்காலத்தில் தங்களது விருப்பமானவர்களின் பெயர்களையோ அல்லது தங்களது பெயர்களையோ பச்சைக் குத்திக் கொள்வார்கள். எனவே இந்த மாதிரியான இடமும் டாட்டூ போடுவதற்கு சிறந்தது.

கணுக்கால்

கணுக்கால்

தற்போது கணுக்கால்களில் டாட்டூ போடுவதும் ஃபேஷனாகிவிட்டது. இதனால் கால்களுக்கு அணியும் காலணிகளுக்கு ஏற்றவாறு போட்டால், கால்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும்.

தொப்புள்

தொப்புள்

டாட்டூ போட்டால் மிகவும் ஹாட்டாக, செக்ஸியாக இருக்கும் இடம் என்றால் அது தொப்புள் தான். அதிலும் அத்தகைய டாட்டூக்களை சரியாக தேர்ந்தெடுத்து, சேலை மற்றும் லெஹங்கா போன்ற உடைகளை அணிந்தால், சூப்பராக இருக்கும்.

மார்பு

மார்பு

மார்பகங்களில் டாட்டூக்களை போடுவதற்கு நிறைய இடம் உள்ளது. அதிலும் அந்த இடங்களில் டாட்டூக்கள் வரைந்து, குறைவான உடை அணிந்தால், பார்க்க அழகாக வித்தியாசமாக இருக்கும்.

தொடை

தொடை

தொடை தெரியுமாறு உடை போடும் போது, தொடை அழகாக இருக்க தொடையில் ஏதாவது பூ போன்றோ அல்லது வேறு ஏதாவது விருப்பமான ஒன்றையோ டாட்டூவாக வரையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Spots On Your Body To Get Tattooed | எந்த இடங்களில் எல்லாம் டாட்டூ போடலாம்?

Getting a tattoo on your body or getting 'inked' as they say now, is not an easy decision. You cannot be impulsive about getting tattoos. You need to analyse and visualise how a tattoo will look on your body. Here we have selected 10 best spots on your body for getting tattoos.
Story first published: Thursday, January 24, 2013, 13:20 [IST]
Desktop Bottom Promotion