For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஸ்மெடிக் சர்ஜரிக்கு முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!!!

By Super
|

தற்போதுள்ள மக்கள் தங்களை வெகு அழகாக காண்பிக்க, அறுவை சிகிச்சை மூலம் அழகுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். எது சாத்தியமற்றதாக இருக்கின்றதோ, இப்போது அது சாத்தியமாக உள்ளது. மேலும் இதன் மூலம், ஒருவர் தனது இளமைத் தன்மையை திரும்பப் பெறுவதோடு, சருமத்தின் மீது ஏற்படும் மூப்படைதலுக்கான விளைவுகளை நிறுத்த முடியும். அதுமட்டுமின்றி, மக்கள் வேகமாக அழகுப்படுத்துகின்ற அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுப்பதன் மூலம், தங்கள் சருமத்தின் இளமையை காக்க மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடை இழப்புக்கு வேண்டியும், இந்த முறையை தேர்வு செய்கின்றனர்.

பிளவுப்பட்ட உதட்டிற்காகவும், மூக்கு அல்லது உதடு வேலைக்காகவும் மற்றும் பல்வேறு சரும பிரச்சனைக்காகவும் செய்யப்படுகின்ற இந்த அறுவை சிகிச்சையை, நாகரீகமாகவும் கருதுகிறார்கள். மேலும் எப்போதுமே அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் பார்த்து கொள்ள வேண்டிய செயல்கள் என்ற ஒன்று உள்ளன. ஆகவே அழகாக மாற வேண்டுமென்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நினைப்பவர்கள், டாக்டர் சந்தீப் பாசின் என்னும் அழகு சிகிச்சை நிபுணர் வழங்கும், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் எடுத்துக் கொள்ள வேண்டிய சில அழகுக்கான முன்னெச்சரிக்கை குறிப்புகளை கருத்தில் கொண்டு, பின் மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

அழகுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்த பகுதியில் எந்த ஒரு அழகுப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. எப்போதும் அறுவை சிகிச்சை செய்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பகுதியை மருந்து தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.

சூரிய ஒளியைத் தவிர்க்கவும்

சூரிய ஒளியைத் தவிர்க்கவும்

சூரிய ஒளியில் சிறிது நேரமே செல்ல வேண்டும். ஏனெனில் புற ஊதா கதிர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்ட தையல் மீதும் மற்றும் அது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பகுதியிலும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படும் சன் ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்தினால், ஒன்றும் ஆகாது என்று நினைக்க வேண்டாம். தையலை பிரித்த பிறகு, மருத்துவர் பரிந்துரைத்தது போல ஆன்டிபயாடிக் மற்றும் மருந்துகள் போட வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

ஆன்டிபயாடிக்குகள் சில நேரங்களில் வாயு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் சரியான உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பழங்கள், கொழுப்பு நீக்கிய பால் மற்றும் மிதமான உணவுகளை போதுமான அளவு உண்ண வேண்டும். முக அறுவை சிகிச்சைகளில் உணவு சாப்பிடுவது சிரமமாக இருப்பதால், அந்த நேரங்களில் திரவ உணவுக் கட்டுப்பாட்டை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவைகளை, அறுவை சிகிச்சை பகுதி முழுவதுமாக குணமாகும் வரை உபயோகிக்கக்கூடாது. மேலும் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை, அறுவை சிகிச்சைக்கு முன்னும் தவிர்க்க வேண்டும்.

மருந்துகளை தவிர்க்கவும்

மருந்துகளை தவிர்க்கவும்

இரத்த உறைதலை கடினமாக்கும் மருந்துகளை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை துவங்குவதற்கு முன்பு நோயாளி ஒரு வலுவான நோய்த் தடுப்பாற்றலை கொண்டிருக்க வேண்டும். மருத்துவர்கள் அனுமதியின்றி மருந்துகளை உட்கொள்ளல் தீங்கு நிறைந்த விளைவுகளை ஏற்படுத்தலாம்.

கற்றாழை சாறு

கற்றாழை சாறு

கற்றாழை சாற்றினை உட்கொள்வது, உள்ளிருந்து கிழிந்த செல்களை குணப்படுத்துவதற்காகவும் மற்றும் தரமான சருமத்தை உருவாக்கவும் உதவுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைகளில் முகம் சார்ந்தவைகள், சரும பொலிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. அத்தகைய இழந்த பொலிவை கற்றாழை சாறு திரும்பப் பெற உதவுகிறது. அதிலும் அந்த கற்றாழையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மருத்துவரைப் பற்றி நன்கு அறிந்திருத்தல்

மருத்துவரைப் பற்றி நன்கு அறிந்திருத்தல்

ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை தீர்மானிக்கும் முன்பு, அவர்/அவள் அத்துறையில் போதுமான நம்பிக்கைச் சான்றுகள் மற்றும் திறன்கள் கொண்டிருக்கின்றவரா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரு லிபோசக்ஷன் நிபுணரை, மூக்கு அறுவை சிகிச்சை நடத்த தகுந்தவராக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது, மருத்துவ வரலாற்றைப் பற்றி விவாதிப்பதே மருத்துவ நடைமுறைகள் பற்றிய ஆலோசனைக்கு உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 precautions before and after cosmetic surgery

Going under plastic surgeon's knife for pout, nose job, lip job or any other skin problem has become fashionable but there are always areas of concern and safety which you need to take care before and after cosmetic surgery.
Desktop Bottom Promotion