For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடை குறைவுக்கு பின் சருமம் சுருக்கமா தெரியுதா? இதோ சில டிப்ஸ்....

By Super
|

பெண்கள் எப்போதுமே அனைத்து வகையான ஆடைகளும் தம் உடலுக்கு பொருந்துமாறு இருப்பதில் மிக அதிகமான நாட்டம் கொள்ளவார்கள். அதனால் கூடுதல் ஊளைச் சதையிருப்பின் அதனை குறைப்பதில் தெளிவாக இருப்பார்கள். மேலும் சரியான உடல் எடை தான் என்றும் சரியான உடல் அமைப்பை காட்டக்கூடிய முதல் படி ஆகும். ஆகவே அவ்வாறு உடல் எடையை சரியாக வைப்பதற்கு நன்கு கடினமாக போராடி, உடல் எடையைக் குறைத்தப் பின்னர், உடலில் ஆங்காங்கு சருமம் தளர்ந்து, சுருக்கங்கள் போன்று காணப்படும்.

எனவே இத்தகைய தளர்ச்சியைப் போக்கி, உடலை அழகாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள ஒருசில வழிகளைப் பின்பற்ற வேண்டும். அத்தகைய வழிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, உடலை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கரப்

ஸ்கரப்

ஸ்கரப் செய்வதால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, சருமம் நல்ல நெகிழ்திறம் ஆகியவற்றைப் பெற்று தளர்வாக இருக்கும் சருமம் இறுக்கமடையும். எனவே தினமும் ஒரு நல்ல ஸ்கரப்பர் பயன்படுத்தி உடலை தினமும் இருமுறை / மூன்று முறை தேய்க்கவும்.

மசாஜ்

மசாஜ்

ஒரு நல்ல மசாஜ் உடற்பயிற்சிக் கோட்பாடு ஒருவருடைய சருமம் இறுக்குவதற்கு உதவலாம்.

தொட்டி குளியல்

தொட்டி குளியல்

ஆரோக்கிய நீரூற்றில் குளிப்பது மற்றும் அதனால் பெறும் நன்மைகளைப் பற்றி அறிய முயற்சித்தல் வேண்டும். பல்வேறு பிரத்யேகமான ஸ்பா சிகிச்சைகளாவன மாஸ்க், தனிப்பயனாக்கப்பட்ட குளியல்கள் போன்றவை சருமத்தை இறுக்குவதற்குப் பயன்படுகின்றன.

க்ரீம்கள்

க்ரீம்கள்

கொலாஜன் க்ரீம்களை முயற்சித்து பார்க்கவும். ஏனெனில் அத்தகைய கிரீம்கள் விசேஷமாக தோல் இறுக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிப்பது

தண்ணீர் குடிப்பது

நிறைய தண்ணீரை குடியுங்கள். அது தோலை ஈரப்பதம் உள்ளதாகவும் மற்றும் மீண்டும் புத்துணர்ச்சியாக்க உண்மையில் உதவுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 4-5 முறைகள் சாப்பிடுவதால், தோல் மீண்டும் வடிவத்தை பெறுவதற்கு வேண்டிய முக்கிய சத்துக்கள் கிடைக்க பெறுகின்றன.

சன் ஸ்கிரீன் லோசன்

சன் ஸ்கிரீன் லோசன்

சூரிய ஒளியிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு சன் ஸ்கிரீன்கள் உபயோகித்து, முறையான சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

சோப்பு மற்றும் ஷாம்பு

சோப்பு மற்றும் ஷாம்பு

சோப்புகள், ஷாம்பு, பாடிவாஷ்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சல்ஃபேட் தோலை உலர செய்து, கடினமான தோலாக மாற்றும் என்று அறியப்பட்டுள்ளது. அதிலும் தோல் இறுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பல்வேறு சல்பேட் அற்ற பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே கவனமாக ஷாப்பிங் செய்ய வேண்டும்.

சூடு நீர் குளியலை தவிர்த்தல்

சூடு நீர் குளியலை தவிர்த்தல்

சூடான நீர் குளியலுக்கு இப்பொழுது விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் சுடு நீர் தோலை உலர செய்து விடும். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவதால் தோலில் ஈரப்பதம் இருக்க உதவுகிறது. இது தோலை இறுக்கும் பணியிலும் உதவுகிறது.

நீச்சல்

நீச்சல்

ஒரு தண்ணீர் பிரியராக இருந்து மற்றும் நீந்த விரும்பினால், குளோரின் உள்ள நீராக இருந்தால் அது தோலை உலர்த்திவிடும். அதனால் அது பற்றி கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்ததும் உடனடியாக நல்ல நீரில் குளிக்க வேண்டும்.

யோகா

யோகா

குறிப்பாக, சில யோக பயிற்சிகள், வயிறு மற்றும் சுவாச பகுதியில் கவனம் செலுத்துவதால், அது தளர்வான வயிற்றுப்பகுதி தோலை இறுக்க உதவ முடியும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

ஒட்டுமொத்த ஆரோக்கியமான தோலுக்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் கார்டியோ பயிற்சிகள் நல்ல சாத்தியதேர்வுகள் ஆகும்.

வயிற்றுப் பயிற்சி

வயிற்றுப் பயிற்சி

கெட்டியான மற்றும் தளர்வான வயிற்றுப்பகுதி தோலை இலக்காக வைத்து செய்ய வேண்டிய பயிற்சிகள் யாவை என்று தனிப்பட்ட பயிற்சியாளர்/உடற்பயிற்சி ஆலோசகருடன் விவாதிக்க வேண்டும்.

புரத உணவுகள்

புரத உணவுகள்

நல்ல தரமான புரதம், குறிப்பாக முழுமையற்ற புரத்தை உண்ண வேண்டும். இது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் அமைக்க தேவையான புரதங்களை தோலுக்கு வழங்குவதன் மூலம் பெற உதவுகிறது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

எதுவும் உதவவில்லை என்றால், அறுவை சிகிச்சை பற்றிய விருப்பத்தை மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். அத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த திசையில் செல்ல மருத்துவரின் சரியான ஆலோசனைகளை பெற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Ways to Tighten Skin After Weight Loss | எடை குறைவுக்கு பின் சருமம் சுருக்கமா தெரியுதா? இதோ சில டிப்ஸ்....

Women are always craving for that hour glass perfect figure. It’s obvious that getting rid of that extra flab and weight is the first step towards that perfect body. But after struggling hard to reduce weight, you find yourself with sagging skin. Enlisted here are some ways to tighten skin after weight loss.
Desktop Bottom Promotion