உங்களிடம் இருக்கும் மைனஸ் பொது இடத்தில் தர்மசங்கடமாக்குகிறதா? அதனை ப்ளஸ் ஆக்குங்கள்!!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான அழகுக் குறிப்புகளை பட்டியலிட்டுள்ளோம். இங்கே குறிப்பிடப் பட்ட அனைத்து குறிப்புகளும் உபயோகமானவை

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நாங்கள் பரிசோதனை மூலம் கண்டறிந்த இந்தக் குறிப்புகளை காணுறும் பொழுது, நீங்கள் கண்டிப்பாக ஆச்ச்சர்யப்படுவீர்கள். ஏனெனில் இந்தக் குறிப்புகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டவை.

எனவே, நீங்கள் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் பல்வேறு இக்கட்டான பிரச்சினைகளை மிக எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும்.

இங்கே உங்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவும் அழகுக்குறிப்புகள் இல்லை இல்லை வாழ்க்கைக்குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1. வாடையடிக்கிற காலணிகள்:

கெட்ட நாற்றம் அடிக்கும் உங்களுடைய காலணியின் உள்ளே ஒரு தேநீர் பையை வைத்து அதை ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விடுங்கள். காலையில் உங்களை முகஞ்சுழிக்க வைத்த நாற்றம் காணாமல் போய்விடும். எங்களை நம்புங்கள். இந்தக் குறிப்பு உங்களுக்கு மிகவும் பயன் அளிக்கும்.

2. உடல் துர்நாற்றம்:

நாம் அனைவரும் ஒரு பார்ட்டி அல்லது வெளியே செல்லும் பொழுது உடல் நாற்றத்தினால் வரும் பிரச்சனைகளை சந்தித்திருப்போம்.

இதை போக்க உங்களுக்கு ஓட்கா தேவை. இந்த ஆல்கஹாலை உங்களுடைய அக்குளிலில் சிறிது தடவுங்கள். இதை தடவும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலை உங்களுடைய தோலில் படாமல் தடவ வேண்டும். ஓட்கா காய்ந்த உடன் நாற்றம் போய் விடும்.

 

3. நாற்றமடிக்கும் கால்கள்:

நீங்கள் எப்போதும் உங்களுடைய கால் நாற்றத்தை போக்க மவுத் வாஷரை பயன்படுத்தி இருக்கின்றீர்களா? வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கப் மவுத்வாஷரை கலந்து அதில் உங்களுடைய கால்களை ஊற வைத்திடுங்கள். மவுத்வாஷரில் உள்ள புதினா நறுமணம் உங்களுடைய கால்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்கி விடும்

4. கொப்புளம் :

இது அனைத்து வகையிலான மற்றும் தேனிக்கள் கொட்டியதினால் வரக்கூடிய கொப்புளத்தையும் குறிக்கும். தேனிக்கள் கொட்டியதினால் வரக்கூடிய கொப்புளம் கடுகடுக்கும்.

தண்ணீர் கலந்து நீரேற்றம் செய்யப்பட்ட ஆப்பிள் சாறு வினிகரை தேனிக்கள் கொட்டிய இடம் அல்லது கொப்புளத்தில் தடவி அப்படியே விட்டு விடுங்கள். வினிகரில் உள்ள அமிலத்தன்மை தேனி கொட்டியதினால் உருவான கடுகடுப்பை போக்கி விடும்.

 

5. முகப்பரு:

ஆப்பிள் சாறு வினிகரின் மற்றொரு பயன் இதுவாகும். உங்களுக்கு இதன் வாசனையை பொருத்துக் கொள்ள முடியும் எனில் இதை டோனராக பயன்படுத்தலாம்.

6. பித்த வெடிப்பு:

முன்தினம் இரவு பெட்ரோலியம் ஜெல்லியை பித்த வெடிப்பில் தடவி அதன் பின் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இதை அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விடுங்கள். மறு நாள் காலை எழுந்த உடன் கண்டிப்பாக வித்தியாசத்தை உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty life hacks you need to know this year

Beauty life hacks you need to know this year
Please Wait while comments are loading...
Subscribe Newsletter