For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திபாவளி ஸ்பெஷல் - சர்க்கரைப் பொங்கல்!

தீபாவளி ஸ்பெஷல் கமகமக்கும் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வதென்று இங்கு கூறப்பட்டுள்ளது.

By Badri
|

தீபாவளியில் வீட்டில் நீங்கள் படு பிசியாக இருப்பீர்கள். நிறைய விருந்தினர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள் இல்லையா? அவர்களை ஆச்சரியப்படுத்த புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்காகத்தான் இதோ உங்களுக்காக சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என விளக்கப் போகிறோம்.

Sweet Rice Recipe For Diwali

உங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் என அனைவருடனும் நேரத்தை நீங்கள் இந்த தீபாவளியை செலவழிக்க விரும்புவீர்கள். சரி இந்த முறை ஏன் சர்க்கரைப் பொங்கலை செய்து நீங்கள் அவர்களை குஷிப்படுத்தக்கூடாது?

இதை செய்யத் தேவையான பொருட்களும் செய்முறையும் மிகவும் சுலபம். சரி எப்படி செய்வது என்று பார்ப்போமா?

எத்தனை பேர் சாப்பிடலாம்? 6 பேர்

தயார் செய்யும் நேரம் : 5-10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

1. சத்தம் - 7 கப் (ஆறிய சாதம்)

2. சர்க்கரை : ஒன்றரை கப்

3. லவங்கப்பட்டை : 2-4

4. மசாலா (பிரிஞ்சி) இலை : 2

5. லவங்கம் : 2-4

6. நெய் - 4 மேஜை கரண்டி

7. குங்குமப் பூ : 2 சிட்டிகை (வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)

8. குங்குமப் பூ கலர் - 2 துளிகள்

மேலே தூவ

1. பாதாம் துருவல் - 1 தேக்கரண்டி

2. பிஸ்தா துருவல் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பெரிய கிண்ணத்தில் சாதத்தை எடுத்துக் கொண்டு அதில் சர்க்கரையை சேர்க்கவும். ஒரு கரண்டியை எடுத்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.

2. ஒரு நன்-ஸ்டிக் வாணலியை எடுத்து அதை மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு நெய்யாய் சேர்த்து சூடாக்கவும்.

3. அதில் லவங்கப் பட்டை, லவங்கம் மற்றும் மசாலா இலையை சேர்த்து நன்கு வறுக்கவும்.

4. அதில் சாதம்-சர்க்கரை கலவையை கொட்டிக் கிளறவும்

5. பாலில் ஊறவைத்த குங்குமப் பூவை சேர்த்து குங்குமப் பூ கலர் திரவத்தை இரு சொட்டு விடவும்.

6. இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 4-5 நிமிடங்களுக்கு சர்க்கரை கரையும் வரை சமைக்கவும்.

7. தண்ணீர் இழுத்துக்கொள்ளும் வரை நீங்கள் இதை நன்கு கிளறவேண்டியது அவசியம்.

8. இப்போது உங்கள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடத் தயார்.

9. ஒரு பெரிய தட்டில் இதைக் கொட்டி பாதாம் மற்றும் பிஸ்தா துருவல்களை மேலே தூவி அலங்கரிக்கவும். தேவையென்றால் சிறிது ஏலக்காய் தூளையும் இதில் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.

பாத்தீங்களா? சர்க்கரைப் பொங்கல் செய்வது எவ்வளவு சுலபம் என்று? பலர் வீடுகளில் இந்த சர்க்கரைப் பொங்கல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதோடு ஏதாவது புதிய முயற்சிகள் செய்யும் முன் இதை செய்து இறைவனுக்குப் படைப்பர்.

இந்த தீபாவளிக்கு இதை ட்ரை பண்ணி உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

English summary

Sweet Rice Recipe For Diwali

diwali special sweet pongal
Story first published: Monday, October 17, 2016, 22:28 [IST]
Desktop Bottom Promotion