வார பலன்(18-5-2012 முதல் 24-5-2012 வரை)

Weekly Forecast
மேஷம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

ரிஷபம்

பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நட்பு வட்டாரம் விரிவடையும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேசாமல் இருப்பது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.

மிதுனம்

பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

கடகம்

பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்

பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். திறமை மேம்படும். அறிவும், ஆற்றலும் பளிச்சிடும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். மனம் உற்சாகமாக இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலைக்கு போகும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அடுத்தவர்கள் சொந்த விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

துலாம்

பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவைக் குறைப்பது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். எதிர்பாராத உதவிகள் பெறக்கூடும். வேலைக்கு போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு குறையும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

தனுசு

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மகரம்

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொறுப்புள்ள பதவி கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக வராத உறவினர் வந்து மகிழ்ச்சியடையக்கூடும். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகள் சொல்படி நடப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

மீனம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பெற்றோர் நலனில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலைக்குப் போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. சிலர் வருமானம் அதிகம் கிடைக்கும் வேலைக்கு செல்ல முயற்சிக்கலாம்.
User Comments
SENTRY 04 May 2012 12:16 pm
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
[ கருத்தை எழுதுங்கள் ]